புதிய பைக் மீது லாரி மோதல் மருமகன் - தாய்மாமன் பலி

ஹாவேரி: புதிய பைக் வாங்கிக் கொண்டு வீட்டுக்கு சென்று கொண்டிருந்தபோது, லாரி மோதியதில் மருமகனும், தாய்மாமனும் உயிரிழந்தனர்.

ஹாவேரி மாவட்டம், ஹனகல்லின் வர்டி கிராமத்தைச் சேர்ந்தவர் நாகராஜ் பாவடி, 25. சங்கரிகொப்பா கிராமத்தைச் சேர்ந்தவர் மல்லேசப்பா தேவிஹொசூர், நாகராஜின் தாய்மாமா

நேற்று காலை நாகராஜ் பாவடியும், மல்லேசப்பாவும் நகரில் புதிய இரு சக்கர வாகனத்தை வாங்கிக் கொண்டு வீட்டுக்கு திரும்பிக் கொண்டிருந்தனர்.

கவுரபூர் கிராமம் அருகே வந்தபோது, எதிரே வந்த லாரி மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

தாய்மாமா - மருமகன் என்றாலும், இருவரும் நண்பர்கள் போன்று பழகி வந்தனர். ஒரே நாளில் இருவரும் இறந்தது, குடும்பத்தினர், உறவினர்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

ஹாவேரி ரூரல் போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement