உரிய நேரத்தில் பாகிஸ்தானுக்கு பதிலடி மத்திய அமைச்சர் பிரஹலாத் ஜோஷி தகவல்

தார்வாட்: ''பாகிஸ்தானுக்கு எதிராக தேவையான அனைத்து நடவடிக்கைகளையும், தேவையான நேரத்தில் மத்திய அரசு எடுக்கும்,'' என, மத்திய அமைச்சர் பிரஹலாத் ஜோஷி தெரிவித்தார்.
தார்வாட் மாவட்டம் ஹூப்பள்ளியில் நேற்று அவர் அளித்த பேட்டி:
பாகிஸ்தானுக்கு எதிராக தேவையான அனைத்து நடவடிக்கைகளையும், தேவையான நேரத்தில் மத்திய அரசு எடுக்கும். எதற்குமே காலக்கெடு நிர்ணயித்து, இப்படி தான் செய்ய வேண்டும் என்று கூற முடியாது.
தவறு செய்பவர்கள் தண்டிக்கப்படுவர் என்று பிரதமரும், பாதுகாப்பு அமைச்சரும் தெளிவான உத்தரவாதம் அளித்துள்ளனர்.
நாட்டில் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் நம் ராணுவம் எடுக்கும். அமைச்சர் ஜமீர் அகமது கான் அமைதியாக இருந்தால், நாடு அமைதியாக முன்னேறும்.
மகதாயி பிரச்னையில் மத்திய அரசு அலட்சியாக உள்ளது என்று முதல்வர் சித்தராமையா கூறி உள்ளார். நாங்கள் கேட்கும் கேள்விக்கு எந்த பதில் அளிக்காமல் திசை திருப்ப முயற்சிக்கிறார். 1970ல் மகதாயி திட்டம் வேகம் பெற்றது.
1980 முதல் 2025 வரை உங்கள் அரசு தான், மாநிலத்தில் பல முறை ஆட்சி செய்துள்ளது. நீங்கள் ஏன் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை?
மகதாயிக்கு விரிவான திட்ட அறிக்கை, சுற்றுச்சூழல் அனுமதியும் வழங்கி உள்ளோம். இதற்கு முட்டுக்கட்டை போடுவது, வனவிலங்கு வாரியம் தான். இவ்விஷயம் தற்போது உச்ச நீதிமன்றத்தில் உள்ளது.
கோவா வனவிலங்கு வாரியம், மகதாயி பகுதியில் எந்த பணியும் செய்யக்கூடாது என்று தடை விதித்துள்ளது. இதை எதிர்த்து மாநில அரசு, உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது. வனவிலங்கு வாரிய உத்தரவை ரத்து செய்யும்படி கூறியுள்ளோம். இவ்விஷயத்தில் நீங்கள் என்ன செய்துள்ளீர்கள் என்பதை சொல்லுங்கள்.
கே.பி.எஸ்.சி., எனும் கர்நாடக பப்ளிக் சர்வீஸ் கமிஷன் தேர்வில், எட்டு கேள்விகள் தவறாக கேட்கப்பட்டுள்ளன. இதை எதிர்த்து கேள்வி கேட்டால், அவர்கள் மீது மிளகாய் பொடியை துாவியது போன்று துள்ளிக் குதிக்கின்றனர்.
இவ்வாறு கூறினார்.
மேலும்
-
கோவில் குளத்தில் மூழ்கி 3 பேர் பலி; வேத பாராயணம் படிக்க வந்த போது சோகம்!
-
சென்னையில் 7 இடங்களில் அமலாக்கத்துறை சோதனை!
-
அரசு பஸ்- பால் வேன் நேருக்கு நேர் மோதல்; நள்ளிரவில் நடந்த விபத்தில் 3 பேர் பலியான சோகம்
-
வடகாட்டில் இரு தரப்பினரிடம் ஏற்பட்ட மோதலால் 10 க்கு மேற்பட்டவர்கள் காயம் : ஒருவருக்கு அருவாள் வெட்டு
-
அப்பல்லோ மருத்துவமனையில் வைகோ அனுமதி!
-
290 ரூபாய் சம்பளத்துக்கு ஆந்திரா, மஹா., பணியாளர்கள்