'ஞானிகளின் உபதேசங்கள் வழியாக ஞானம் அடையலாம்'

கோவை: சுவாமி பரமார்த்தானந்தரின் ஆன்மிக சொற்பொழிவு நிகழ்ச்சி, கோவை பாரதீய வித்யா பவன் அரங்கில், நேற்று நடந்தது.
இதில், சுவாமி பரமார்த்தானந்தர் பேசியதாவது:
நமக்கு விழித்திருக்கும் நிலை, துாங்கும் நிலை இவை இரண்டுக்கும் இடையில் கனவு நிலை என, மூன்று நிலைகள் உண்டு. கனவு நிலையில் இருக்கும் ஒருவர், தான் கனவில் காண்பதை உண்மை என்று நம்புகிறார்.
அதே நபர் விழித்த பிறகு, நாம் கண்டது உண்மையல்ல; கனவு என்று உணர்கிறார். உறங்கும் போது வந்த கனவை உண்மை என்று நம்பியவர், விழித்த பிறகு அது உண்மையல்ல என்று நம்புகிறார். அப்படி என்றால் விழிப்பு நிலைக்கும், உறக்க நிலைக்கும் அடுத்து, இன்னொரு நிலை இருக்கிறது என்று சாஸ்திரம் சொல்கிறது.
விழிப்பு, ஆழ்ந்த உறக்கம், கனவு ஆகியவை, அறிவின் பண்புகளாகும். அவை குணங்களால் ஏற்படுகின்றன. ஆன்மா அவற்றிலிருந்து வேறுபட்டது. அது என்னவென்று நமக்கு தெரியாது, பகவானுக்கு தெரியும். பகவானின் அருளை பெற்ற ஞானிகளுக்கு தெரியும். ஞானிகளின் உபதேசங்கள் வழியாக, நாம் அந்த ஞானத்தை அடைய வேண்டும்.இவ்வாறு, அவர் பேசினார்.
மேலும்
-
கோவில் குளத்தில் மூழ்கி 3 பேர் பலி; வேத பாராயணம் படிக்க வந்த போது சோகம்!
-
சென்னையில் 7 இடங்களில் அமலாக்கத்துறை சோதனை!
-
அரசு பஸ்- பால் வேன் நேருக்கு நேர் மோதல்; நள்ளிரவில் நடந்த விபத்தில் 3 பேர் பலியான சோகம்
-
வடகாட்டில் இரு தரப்பினரிடம் ஏற்பட்ட மோதலால் 10 க்கு மேற்பட்டவர்கள் காயம் : ஒருவருக்கு அருவாள் வெட்டு
-
அப்பல்லோ மருத்துவமனையில் வைகோ அனுமதி!
-
290 ரூபாய் சம்பளத்துக்கு ஆந்திரா, மஹா., பணியாளர்கள்