'ஹிந்து அமைப்பினருக்கு பாதுகாப்பில்லை'

பெங்களூரு: ''தட்சிண கன்னடாவில் ஹிந்து பிரமுகர்களுக்கு பாதுகாப்பு இல்லாதது அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது,'' என, மாநில பா.ஜ., தலைவர் விஜயேந்திரா தெரிவித்தார்.

பெங்களூரில் நேற்று அவர் அளித்த பேட்டி:

மங்களூரில் சுஹாஸ் ஷெட்டி கொலை, மக்களை அதிர்ச்சி அடைய செய்துள்ளது. தற்போது மற்றொரு ஆர்வலர் பரத் கும்டாவுக்கு, சமூக வலைதளம் வாயிலாக கொலை மிரட்டல் வந்துள்ளது. கேரளாவை சேர்ந்த முகமது அஷ்ரப்பின் கொலையில், பரத் கும்டாவுக்கு தொடர்பு இருப்பதாக கூறி, அவருக்கு மிரட்டல் விடுத்துள்ளனர்.

தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகளுக்கு கூட, இப்போது பாதுகாப்பு இல்லை. அரசும், இப்பாதையில் தொடர்ந்தால், பா.ஜ.,வின் போராட்டம் தீவிரமடையும். தட்சிண கன்னடாவில் ஹிந்து பிரமுகர்களுக்கு பாதுகாப்பு இல்லாதது அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. அவர்களுக்கு கொலை மிரட்டல் விடுத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல், மாநிலத்தில் சட்டம் - ஒழுங்கை பராமரிக்க காங்கிரஸ் அரசு தவறிவிட்டது.

இவ்வாறு அவர் கூறினார்.

இதற்கிடையில், தனக்கு சமூக வலைதளத்தில் கொலை மிரட்டல் வந்துள்ளதாக, விஸ்வ ஹிந்து பரிஷத் பிரமுகர் சரண் பம்ப்வெல், மங்களூரு போலீசில் புகார் அளித்துள்ளார்.

Advertisement