கல்லுாரி ஆண்டு விழா

ராஜபாளையம்: ராஜபாளையம் ராஜூக்கள் கல்லுாரி ஆண்டு விழா மாணவர் சங்க கூட்டரங்கில் நடந்தது.

கல்லுாரி முதல்வர் ராமகிருஷ்ணன் வரவேற்றார். தலைவர் தர்மகிருஷ்ண ராஜா, செயலர் பிரகாஷ் வாழ்த்தி பேசினர். நகராட்சி தலைவர் பவித்ரா பரிசு வழங்கினார். மாணவர்கள் கலை நிகழ்ச்சி நடந்தது. மாணவி சகஸ்ரா நன்றி கூறினார். ஆட்சி மன்ற குழு உறுப்பினர்கள், பேராசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர் கலந்து கொண்டனர்.

Advertisement