சாத்துார் அமீர் பாளையம் ரோட்டோரம் எரிக்கப்படும் குப்பையால் மக்கள் அவதி

சாத்துார்: சாத்துார் அமீர் பாளையம் ரோட்டோரம் குப்பைகள் எரிக்கப்படுவதால் மக்கள் அவதிப்படுகின்றனர்.

சாத்துார் - கோவில்பட்டி மெயின்ரோட்டில் உள்ளது அமீர் பாளையம் சத்திரப் பட்டி ஊராட்சிக்குட்பட்ட இப்பகுதியில்ஆயிரத்துக்கு மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன.

இந்த குடியிருப்புகளில் சேகரிக்கப்படும் குப்பைகள் ரோட்டின் ஓரம் குவித்து வைக்கப்பட்டு தீ யிட்டு கொளுத்தப்படுகிறது. இந்தக் குப்பையில் அதிகளவு பிளாஸ்டிக் கழிவுகள் உள்ளன.

பிளாஸ்டிக் கழிவுகள் எரிக்கப்படும் போது ஏற்படும் நச்சுப் புகை காரணமாக இவ் வழியாக இரு சக்கர வாகனங்களில் செல்லும் நபர்களும் குடியிருப்பு பகுதியில் வசிக்கும் மக்களும் கடும் சுவாச பாதிப்புக்கு ஆளாகி அவதிப்படுகின்றனர்.

திடீர் என சூறாவளி காற்று வீசும் போது அனல் காற்று ரோட்டில் செல்பவர்கள் மீது படுவதால் உடலில் எரிச்சல் போன்ற பாதிப்பு ஏற்படுகிறது.இதனால் இருசக்கர வாகன ஓட்டிகள் விபத்திற்கு ஆளாகி வருகின்றனர்.

ஊராட்சி நிர்வாகம் ரோட்டின் ஓரத்தில் குப்பைகள் கொட்டுவதை தடுப்பதுடன் ஊருக்கு வெளியே கொண்டு சென்று சுகாதாரமான முறையில் அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

Advertisement