ரோடு, வாறுகால், பஸ் வசதியின்றி சிரமம்

ஸ்ரீவில்லிபுத்துார்: தெருக்களில் ரோடு, வாறுகால் இல்லாமல் சுகாதாரக் கேடு, பஸ் வசதியின்றி சிரமம், குறுகிய ரோட்டால் விபத்து அபாயம் உட்பட பல்வேறு சிரமங்களுடன் வசித்து வருகின்றனர் கலங்காபேரி ஊராட்சி மக்கள்.
ஸ்ரீவில்லிபுத்தூர் ஒன்றியத்திற்கு உட்பட்டது கலங்காபேரி ஊராட்சி. இதன் கீழ் முல்லை நகர், கலங்காபேரி, கலங்காபேரி புதுார், முத்துலிங்கபுரம், கம்மாபட்டி, சாரதா நகர், வேட்டை பெருமாள் நகர், விஷ்ணு நகர் ஆகிய சேய் கிராமங்கள் உள்ளது.
இந்த ஊராட்சி ஸ்ரீவில்லிபுத்தூர் ஒன்றியத்தின் கீழ் இருந்தாலும் தாலுகா முழுவதும் ராஜபாளையம் பகுதிக்குள் வருவதால் இப்பகுதி மக்கள் ஏதேனும் சான்றிதழ் பெற வேண்டுமெனில் இரண்டு அலுவலகங்களுக்கும் மாறி, மாறி அலைய வேண்டிய நிலை பல ஆண்டுகளாக காணப்படுகிறது.
ராஜபாளையம் நகரின் வடகிழக்கு பகுதியில் உள்ள இந்த ஊராட்சியில் நாளுக்கு நாள் புதிய குடியிருப்புகள் அதிகரித்து வருகிறது. இதனால் பல்வேறு பகுதிகளில் முறையான ரோடு, வாறுகால் வசதியில்லாமல் மக்கள் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.
ஆர்.ஆர் நகரில் இருந்து கலங்காபேரி இணைப்பு சாலைக்கு வரும் ரோடு பல மாதங்களாக குண்டும், குழியுமாக இருப்பதால் அவ்வழியாக டூவீலர்களில் வருபவர்கள் விபத்துக்கு ஆளாகும் அபாயம் உள்ளது. கலங்காபேரியில் உள்ள ஊராட்சி நூலகம் பூட்டி கிடக்கிறது. அப்பகுதியில் உள்ள வாறுகால்களில் கழிவுகள் தேங்கி, செடி கொடிகள் வளர்ந்து புதர் மண்டி காணப்படுகிறது. கலங்காபேரி மெயின் ரோட்டில் பல இடங்களில் ரோடு சேதமடைந்து காணப்படுகிறது.
விஷ்ணு நகர் 7வது தெரு, சாரதா நகர், முல்லை நகர் உட்பட பல்வேறு புதிய குடியிருப்பு பகுதிகளில் செம்மண் ரோடு மட்டுமே உள்ளது. வாறுகால் வசதி இல்லாமல் ஆங்காங்கே கழிவுகள் தேங்கி கிடக்கிறது.
கம்மாபட்டி கிராமத்திற்கு மினி பஸ்சோ, அரசு பஸ் வசதியோ இல்லாமல் அப்பகுதி மக்கள் ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்துார் வந்து செல்ல மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். கலங்காபேரி புதூர் மெயின் ரோடு மேற்கு பகுதி உள்ள கழிவு நீர் ஓடையில் கழிவுகள் கொட்டப்பட்டும், செடி கொடிகள் வளர்ந்து புதர் மண்டியும் காணப்படுகிறது.
ஊராட்சிக்கு உட்பட்ட சேய் கிராமங்களில் போதிய குடிநீர் வசதி இன்றி விலை கொடுத்து வாங்கும் நிலை உள்ளது. குடியிருப்புகளும், மக்கள் போக்குவரத்தும் அதிகரித்துள்ள நிலையில் போதிய பஸ் வசதி இல்லாமல் ஏழை மக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். இத்தகைய பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வு காண மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென கலங்காபேரி ஊராட்சி மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
மேலும்
-
துருக்கி அதிபர் உதவியுடன் போரை முடிவுக்கு கொண்டு வருவேன்: அதிபர் டிரம்ப் சபதம்!
-
சுப்ரீம்கோர்ட் நீதிபதிகள் 21 பேரின் சொத்து விவரங்கள்: இணையத்தில் வெளியீடு
-
கோவில் குளத்தில் மூழ்கி 3 பேர் பலி; வேத பாராயணம் படிக்க வந்த போது சோகம்!
-
சென்னையில் 7 இடங்களில் அமலாக்கத்துறை சோதனை!
-
அரசு பஸ்- பால் வேன் நேருக்கு நேர் மோதல்; நள்ளிரவில் நடந்த விபத்தில் 3 பேர் பலியான சோகம்
-
வடகாட்டில் இரு தரப்பினரிடம் ஏற்பட்ட மோதலால் 10 க்கு மேற்பட்டவர்கள் காயம் : ஒருவருக்கு அருவாள் வெட்டு