வெறிநாய் கடித்து 6 பேர் காயம்

திருவாடானை: திருவாடானை அருகே திருவெற்றியூரை சேர்ந்த வல்மீகம் 40, தர்மராஜ் 55 உள்ளிட்ட 6 பேர் நேற்று முன்தினம் மாலையில் தெருவில் நடந்து சென்றனர்.

அப்போது வெறிநாய் காலில் கடித்ததில் அனைவரும் காயமடைந்தனர். அவர்களுக்கு அங்குள்ள ஆரம்பசுகாதார நிலையத்தில் சிகிச்சை அளிக்கபட்டது. திருவெற்றியூர் பாகம்பிரியாள் கோயிலில் திருவிழா நடைபெறுவதால் வெறிநாய்களை கட்டுப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பக்தர்கள் வலியுறுத்தினர்.

Advertisement