சாயல்குடியில் வெப்ப வாதம் குறித்த விழிப்புணர்வு

சாயல்குடி: சாயல்குடி பேரூராட்சி நிர்வாகத்தின் சார்பில் ஹீட் ஸ்ட்ரோக் எனப்படும் வெப்ப வாதம் குறித்து நோட்டீஸ் வழங்கி மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துகின்றனர்.

இதில், தாகம் எடுத்தாலும் எடுக்காவிட்டாலும் போதுமான தண்ணீர் குடிக்க வேண்டும். லேசான, வெளிர்நிற ஆடை அணிந்து பாதுகாப்பு கண்ணாடி, குடை, தொப்பி மற்றும் காலணிகளை பயன்படுத்த வேண்டும். பிரயாணத்திற்கு தண்ணீர் எடுத்துச் செல்ல வேண்டும்.

தலை, கழுத்து, முகம் மற்றும் கால்களின் மேல் ஈரத்துணியை பயன்படுத்தலாம். லஸ்ஸி, கஞ்சி, பழச்சாறு, மோர் போன்றவற்றை பயன்படுத்தவும். உஷ்ணம் அதிகமாக இருக்கும் போது கடினமான உழைப்பை தவிர்க்கலாம். முதலுதவி குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது.

Advertisement