ராமேஸ்வரத்தில் சட்டசபை மனுக்கள் குழு ஆய்வு

ராமேஸ்வரம்: ராமேஸ்வரத்தில் நேற்று சட்டசபை மனுக்கள் குழுவினர் பாதாள சாக்கடை மையம், அரசு மருத்துவமனையை ஆய்வு செய்தனர்.

நேற்று ராமேஸ்வரம் வந்த சட்டசபை மனுக்கள் குழுவின் தலைவர் எம்.எல்.ஏ., ராமச்சந்திரன், எம்.எல்.ஏ., ஜோதி உள்ளிட்டோர் ஓலைக்குடாவில் உள்ள பாதாள சாக்கடை திட்ட மையத்தை ஆய்வு செய்தனர். மேலும் ராமேஸ்வரம் அரசு மருத்துவமனை, தனுஷ்கோடியில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, இங்குள்ள கடல் ஆமைகள் முட்டை சேகரிப்பு மையத்தை ஆய்வு செய்தனர். ஆய்வின் போது, மருத்துவமனையில் உள் நோயாளிகளுக்கான வசதிகள், வெளிநோயாளிகளுக்கு மருத்துவ சேவைகள் குறித்தும், பாதாள சாக்கடை திட்டத்தை விரைவில் துவக்கி, துாய்மை நகரமாக பராமரிப்பது குறித்து கலெக்டர் சிம்ரன்ஜித் சிங் காலோனிடம் எம்.எல்.ஏ.,க்கள் ஆலோசித்தனர். இது குறித்து இன்று (மே 6) ராமநாதபுரத்தில் ஆய்வுக் கூட்டம் நடைபெற உள்ளது.

Advertisement