சி.பி.எஸ்., ஒழிப்பு இயக்கம் இருசக்கர வாகன பிரசாரம்

ராமநாதபுரம்: ராமநாதபுரத்தில் சி.பி.எஸ்., ஒழிப்பு இயக்கம் சார்பில், புதிய ஓய்வூதிய திட்டத்தினை ரத்து செய்யக்கோரி இருசக்கர வாகன பிரசாரம் நடந்தது.
புதிய ஓய்வூதிய திட்டத்தினை ரத்து செய்யக்கோரி சி.பி.எஸ்., ஒழிப்பு இயக்கம் சார்பில், பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர். சட்டசபை தேர்தலில் போது வழங்கப்பட்ட வாக்குறுதியை அரசு நிறைவேற்ற வலியுறுத்தி இரு சக்கர வாகனங்களில் சி.பி.எஸ்., ஒழிப்பு இயக்கம் சார்பில் பிரசாரம் செய்தனர். ராமேஸ்வரம் அப்துல்கலாம் இல்லத்திலிருந்து தொடங்கப்பட்ட இரு சக்கர வாகன பிரசாரம் மண்டபம், உச்சிப்புளி, ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகம், நயினார்கோவில், இளையான்குடி வரை துண்டு பிரசுரங்களை வழங்கியும், கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டத்திற்கு மாநில ஒருங்கிணைப்பாளர் செல்வக்குமார் தலைமை வகித்தார். தமிழக அரசினை கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டன. மாநில இணை ஒருங்கிணைப்பாளர்கள் விஜயகுமார், சீனிமுகமது, மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ராமநாதன் மாவட்ட இணை ஒருங்கிணைப்பாளர்கள் உட்பட நிர்வாகிகள் பங்கேற்றனர்.----------
மேலும்
-
2 நாட்களில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.2,160 அதிகரிப்பு; வரலாறு காணாத உச்சம்!
-
பயங்கரவாதிகள் பதுக்கிய ஆயுதங்கள் கண்டெடுப்பு; பஞ்சாப் போலீஸ் தீவிர விசாரணை
-
பட்டுக்கோட்டையில் பெண் தலை துண்டித்து கொலை; மர்ம நபர்களை தேடும் போலீசார்
-
துருக்கி அதிபர் உதவியுடன் போரை முடிவுக்கு கொண்டு வருவேன்: அதிபர் டிரம்ப் சபதம்!
-
சுப்ரீம்கோர்ட் நீதிபதிகள் 21 பேரின் சொத்து விவரங்கள்: இணையத்தில் வெளியீடு
-
கோவில் குளத்தில் மூழ்கி 3 பேர் பலி; வேத பாராயணம் படிக்க வந்த போது சோகம்!