ரெகுநாத காவிரி கால்வாயில் பழமையான 13ம் நுாற்றாண்டு நந்தி சிலை கண்டெடுப்பு

கமுதி: கமுதி அருகே ரெகுநாத காவிரி வரத்து கால்வாய் துார்வாரும் பணியின் போது, பழமையான 13ம் நுாற்றாண்டை சேர்ந்த நந்தி சிலை கண்டெடுக்கப்பட்டது.
கமுதி அருகே பாக்குவெட்டி முதல் பேரையூர் வரை செல்லும் ரெகுநாத காவிரி வரத்து கால்வாய் துார்வாரும் பணி நடக்கிறது.
இப்பணியின்போது நேற்றுமுன்தினம்(மே 4) மண்ணுக்குள் புதைந்து கிடந்த பழமையான நந்தி சிலை கிடைத்தது. இதை பேரையூரை சேர்ந்த வரலாற்று ஆர்வலர் முனியசாமி ஆய்வு செய்தார்.
சிலை குறித்து அவர் கூறியதாவது, ரெகுநாத காவிரி வரத்து கால்வாயில் கண்டெடுக்கப்பட்ட பழமையான நந்தி சிலை 13ம் நூற்றாண்டை சேர்ந்த இரண்டாம் மாறவர்மன் சுந்தரபாண்டியன் காலத்து சிலையாக இருக்கலாம். கடந்த சில நாட்களுக்கு முன்பு இதே பகுதியில் கிடைத்த கஜலட்சுமி சிற்பத்தை பொதுமக்கள் கழுங்கு முனியப்பசாமி கோயிலில் வைத்து வழிபட்டு வருகின்றனர். தற்போது கிடைத்த நந்தி சிலையையும் பொதுமக்கள் உதவியுடன் வருவாய்த்துறை அனுமதியுடன் கோயிலில் வைத்து பராமரிக்க முடிவு செய்யப்பட்டது. மேலும் இப்பகுதியில் ஏராளமான பழமையான சிலைகள் கண்டெடுக்கப்பட்டு வருவதால் ஆய்வு செய்யப்பட வேண்டும் என்றார்.
மேலும்
-
கோவில் குளத்தில் மூழ்கி 3 பேர் பலி; வேத பாராயணம் படிக்க வந்த போது சோகம்!
-
சென்னையில் 7 இடங்களில் அமலாக்கத்துறை சோதனை!
-
அரசு பஸ்- பால் வேன் நேருக்கு நேர் மோதல்; நள்ளிரவில் நடந்த விபத்தில் 3 பேர் பலியான சோகம்
-
வடகாட்டில் இரு தரப்பினரிடம் ஏற்பட்ட மோதலால் 10 க்கு மேற்பட்டவர்கள் காயம் : ஒருவருக்கு அருவாள் வெட்டு
-
அப்பல்லோ மருத்துவமனையில் வைகோ அனுமதி!
-
290 ரூபாய் சம்பளத்துக்கு ஆந்திரா, மஹா., பணியாளர்கள்