மண்டல அபிஷேக விழா

ஆர்.எஸ்.மங்கலம்: ஆர்.எஸ்.மங்கலம் அருகே வரவணி இருளாயி அம்மன், சோணையா, மாடையா, கருப்பண்ண சுவாமி, பேச்சியம்மன், சூலக்கரை காளியம்மன் ஆகிய சுவாமிகளுக்கு கடந்த மாதம் கும்பாபிஷேகம் நடந்தது.

நேற்று மண்டல பூஜையை முன்னிட்டு யாகசாலையில் பூஜை செய்த கலச நீரில் மூலவர்களுக்கு அபிஷேகம் செய்தனர். சுவாமிக்கு சங்காபிஷேகம் செய்தனர். ஏற்பாடுகளை வரவணி வேளாளர் சமுதாய குடிமக்கள் செய்தனர்.

Advertisement