ரயில்வே ஸ்டேஷனில் கேமரா இல்லை பயணிகள் பாதுகாப்பு கேள்விக்குறி

ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் ரயில்வே ஸ்டேஷனில் சி.சி.டி.வி., கேமரா பொருத்தாததால், பயணிகளின் பாதுகாப்பு கேள்விக்குறியாகி உள்ளது.

புனித ஆன்மிக நகரான ராமேஸ்வரத்திற்கு ஏப்., 6 முதல் ரயில் போக்குவரத்து துவங்கியதால், நாடு முழுவதும் ஏராளமான பக்தர்கள், சுற்றுலா பயணிகள் ராமேஸ்வரம் ரயில்வே ஸ்டேஷன் வந்திறங்குகின்றனர்.

மேலும் பயணிகள் போர்வையில் சமூக விரோதிகள் ராமேஸ்வரம் ரயில்வே ஸ்டேஷனில் வந்திறங்கி இலங்கை தப்பிச் செல்லவும், இலங்கையில் இருந்து ராமேஸ்வரம் ஊடுருவவும் நாசகார கும்பல்கள் ரயிலில் தப்பிச் செல்லும் அபாயம் உள்ளது. இந்த சமூக விரோதிகளை கண்காணித்து கைது செய்யவும், பயணிகளின் உடமைகளை அபேஸ் செய்யும் திருடர்கள், ரயில்வே ஸ்டேஷனில் ரகளை செய்யும் குசும்புக்காரர்களை கண்டுபிடிக்க, இதுநாள் வரை ராமேஸ்வரம் ரயில்வே ஸ்டேஷனில் சி.சி.டி.வி., கேமரா பொருத்தவில்லை.

இதனால் பயணிகள் மற்றும் புனித நகரின் பாதுகாப்பும் கேள்விக் குறியாகி உள்ளது.

Advertisement