ஏர்வாடி சந்தனக்கூடு விழாவில் தர்காவில் மவுலீது ஓதுதல் ஏராளமானோர் பங்கேற்பு

கீழக்கரை: -ஏர்வாடி அல் குத்புல் சுல்தான் செய்யது இப்ராஹிம் பாதுஷா நாயகம் ஒலியுல்லா தர்காவில் சந்தனக்கூடு திருவிழாவை முன்னிட்டு தொடர்ந்து 23 நாட்களுக்கு மவுலீது என்னும் புகழ் மாலை ஓதப்படுகிறது.
இஸ்லாமிய மார்க்க அறிஞர்களால் தொடர்ந்து ஓதப்படும் மவுலீது நிகழ்ச்சிக்கு ஏராளமான யாத்திரீகர்கள், பொதுமக்கள் பிரார்த்தனைக்காக வருகின்றனர். ஷெரீப் மண்டபத்தில் பேரிச்சம்பழம், பிஸ்கட், லட்டு, சாக்லேட், கற்கண்டு உள்ளிட்டவைகளை தட்டுகளில் வரிசையாக வைத்து பிரார்த்தனை செய்யப்படுகிறது.
மகரீபு தொழுகைக்கு பிறகு மாலை 6:30 முதல் இரவு 10:30 மணி வரை தொடர்ந்து ஓதப்படுகிறது. நிறைவு பெற்ற பின்பு யாத்திரீகர்கள் மற்றும் பொதுமக்களுக்கு பிரசாதமாக இனிப்பு பதார்த்தங்கள் வழங்கப்படுகின்றன. ஏற்பாடுகளை ஏர்வாடி தர்கா ஹக்தார் நிர்வாக சபையினர் செய்கின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
கோவில் குளத்தில் மூழ்கி 3 பேர் பலி; வேத பாராயணம் படிக்க வந்த போது சோகம்!
-
சென்னையில் 7 இடங்களில் அமலாக்கத்துறை சோதனை!
-
அரசு பஸ்- பால் வேன் நேருக்கு நேர் மோதல்; நள்ளிரவில் நடந்த விபத்தில் 3 பேர் பலியான சோகம்
-
வடகாட்டில் இரு தரப்பினரிடம் ஏற்பட்ட மோதலால் 10 க்கு மேற்பட்டவர்கள் காயம் : ஒருவருக்கு அருவாள் வெட்டு
-
அப்பல்லோ மருத்துவமனையில் வைகோ அனுமதி!
-
290 ரூபாய் சம்பளத்துக்கு ஆந்திரா, மஹா., பணியாளர்கள்
Advertisement
Advertisement