ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு இடம் சிகிச்சை அளிக்க அலைக்கழிப்பு

மேலுார்: கிடாரிப்பட்டியில் துணை சுகாதார நிலையம் செயல்பட நிரந்தர கட்டடம் இல்லாததால் பெண்கள் அலைக்கழிக்கப்படுகின்றனர்.
கிடாரிப்பட்டியில் 1992 முதல் துணை சுகாதார நிலையம் செயல்பட்டது. மூன்று ஊராட்சிகளுக்கு உட்பட்ட 10க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு ஒரே சுகாதார நிலையம் என்பதால் இந்நிலையத்திற்கு பிரசவத்திற்கு முந்தைய, பிந்தைய சேவைகள், புதிதாக பிறந்த குழந்தைகளுக்கான சுகாதார சேவை, தடுப்பூசி உள்ளிட்ட தேவைகளுக்காக ஏராளமானோர் சிகிச்சைக்கு வந்து செல்கின்றனர். இக் கட்டடம் சிதலமடையவே 3 ஆண்டுகளுக்கு முன் மூடப்பட்டது. இதுவரை சுகாதார நிலையத்திற்கு கட்டடம் இல்லை.
கருப்பாயி: ஒரே சுகாதார நிலையம் என்பதால் 7 கி.மீ., தொலைவில் இருந்து சிகிச்சைக்கு வருகிறோம். நிரந்தரமான கட்டடம் இல்லாததால் ஊராட்சி அலுவலகம், இ -சேவை மையம், பால்வாடி, மகளிர் சுய உதவிக்குழு என ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு இடத்தில் சிகிச்சை அளிக்கின்றனர். அதனால் தினமும் சுகாதார நிலையத்தை தேடி அலைவதே வேலையாகி வருகிறது. மேலும் நிலையத்தை தேடி அலைவதால் கர்ப்பிணிகள் மயக்கம் அடையும் அவலம் நிலவுகிறது. இதுகுறித்து சுகாதாரத்துறை அதிகாரிடம் புகார் கூறியும் கண்டுகொள்ளவில்லை. அதனால் கலெக்டர் இவ்விஷயத்தில் தலையிட்டு நிரந்தரமாக சுகாதார நிலையம் அமைக்க வேண்டும் என்றார். வட்டார மருத்துவ அலுவலர் அம்பலம் சிவனேசன் கூறுகையில், ரூ. 45 லட்சத்தில் புதிய சுகாதார நிலையம் கட்ட நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. விரைவில் கட்டப்படும் என்றார்.
மேலும்
-
கோவில் குளத்தில் மூழ்கி 3 பேர் பலி; வேத பாராயணம் படிக்க வந்த போது சோகம்!
-
சென்னையில் 7 இடங்களில் அமலாக்கத்துறை சோதனை!
-
அரசு பஸ்- பால் வேன் நேருக்கு நேர் மோதல்; நள்ளிரவில் நடந்த விபத்தில் 3 பேர் பலியான சோகம்
-
வடகாட்டில் இரு தரப்பினரிடம் ஏற்பட்ட மோதலால் 10 க்கு மேற்பட்டவர்கள் காயம் : ஒருவருக்கு அருவாள் வெட்டு
-
அப்பல்லோ மருத்துவமனையில் வைகோ அனுமதி!
-
290 ரூபாய் சம்பளத்துக்கு ஆந்திரா, மஹா., பணியாளர்கள்