கிடாரிப்பட்டியில் 'கிலி'

மேலுார்: கிடாரிப்பட்டியில் மனிதர்கள், கால்நடைகளை வெறி நாய்கள் விரட்டிக் கடிப்பதால் பொது மக்களின் பாதுகாப்பு கேள்விக் குறியாகி உள்ளது.

இக்கிராமத்தில் நாய்கள் கூட்டமாக சென்று மனிதர்களை கடிப்பது வாடிக்கையாகி விட்டது. நேற்று குமரேசன், அன்பழகனை கடித்த நாய்கள், சந்தோஷ், சபா ரத்தினம், கிருஷ்ணமூர்த்தி, வல்லரசு உள்ளிட்டோரின் 9 மாடுகளையும் 5 ஆடுகளையும் கடித்தது. நாய்க்கு பயந்து மக்கள் வீட்டிற்குள்ளே முடங்கி கிடப்பதால் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதித்துள்ளது. நாய்களை பிடிக்க சொல்லி அதிகாரிகளிடம் கூறியும் கண்டுகொள்ளவில்லை. இதற்கு தீர்வு காண மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement