பாதுகாப்பு வழங்க மனு

மதுரை: மதுரை மாவட்ட கிரானைட் குவாரி தொடர்பான முறைகேடுகளை அப்போதைய கலெக்டர் சகாயம் வெளிக்கொண்டு வந்தார். இதுதொடர்பான வழக்கில், 'தனது உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளதால் உயர்நீதிமன்றத்தில் ஆஜராக முடியாது' என தெரிவித்து இருந்தார்.

அவருக்கு முழுநேர பாதுகாப்பு வழங்க வலியுறுத்தி மேலுார் பகுதி டங்ஸ்டன் சுரங்க திட்ட எதிர்ப்பு மக்கள் கூட்டமைப்பு சார்பில் நிர்வாகிகள் செல்வராஜ், பிரகாஷ், அமுதா தலைமையில் கலெக்டர் சங்கீதாவிடம் மனு கொடுத்தனர்.

Advertisement