கேதையுறும்பில் விளையாட்டு அரங்கம் அமைய அடிக்கல்

ஒட்டன்சத்திரம்: ஒட்டன்சத்திரம் அருகே கேதையுறும்பில் முதலமைச்சர் சிறு விளையாட்டு அரங்கம் அமைப்பதற்கு சென்னை தலைமை செயலகத்திலிருந்து காணொளிக் காட்சி மூலம் துணை முதல்வர் உதயநிதி அடிக்கல் நாட்டினார்.

இதை தொடர்ந்து நடந்த நிகழ்ச்சியில் உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி பேசியதாவது:

35 ஏக்கரில் ரூ. 7.5 கோடியில் விளையாட்டு அரங்கம் அமைக்கப்பட உள்ளது. திண்டுக்கல்லில் உள்ள மாவட்ட விளையாட்டு மைதானத்தை விட கேதையுறும்பில் பெரிய அளவில் விளையாட்டு மைதானம் வர உள்ளது.

400 மீட்டர் தடகளம் அமைக்கப்பட உள்ளது. இது 800 மீட்டராகவும் மாற வாய்ப்பு உள்ளது. தொப்பம்பட்டியில் 27 ஏக்கரில் ரூ.9 கோடியில் விளையாட்டு மைதானம் அமைக்கும் பணி முடியும் தருவாயில் உள்ளது என்றார்.

டி.ஆர்.ஓ., ஜெயபாரதி, பழநி ஆர்.டி.ஓ., கண்ணன், தாசில்தார் பழனிச்சாமி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் காமராஜ், பிரபு பாண்டியன், தி.மு.க., மாவட்ட துணைச் செயலாளர் ராஜாமணி, மாவட்ட அவை தலைவர் மோகன், நகர செயலாளர் வெள்ளைச்சாமி, நகராட்சி தலைவர் திருமலைசாமி, ஒன்றிய செயலாளர்கள் ஜோதீஸ்வரன், தர்மராஜ், பாலு, பொன்ராஜ், தலைமை செயற்குழு உறுப்பினர் கண்ணன், பொதுக்குழு உறுப்பினர் செல்வராஜ், முன்னாள் ஒன்றிய தலைவர் சத்தியபுவனா, துணைத்தலைவர் தங்கம் கலந்து கொண்டனர்.

Advertisement