நீர்மோர் பந்தல் திறப்பு

தென்னிந்திய பனியன் உற்பத்தியாளர்கள் சங்கம் (சைமா)சார்பில், அக்னி நட்சத்திர நாட்களில், நீர்மோர் பந்தல் திறக்கப்படுகிறது. அதன்படி, அவிநாசி ரோடு, புஷ்பா தியேட்டர் பஸ் ஸ்டாப் அருகே நீர்மோர் பந்தல் அமைக்கப்பட்டது. சங்க தலைவர் ஈஸ்வரன், துணை மேயர் பாலசுப்பிரமணியம் ஆகியோர், திறந்து வைத்தனர்.

பொதுசெயலாளர் கோவிந்தப்பன், துணை தலைவர் பாலச்சந்தர், இணை செயலர் பழனிசாமி, மூத்த உறுப்பினர் முருகசாமி ஆகியோர், பொதுமக்களுக்கு நீர்மோர் வழங்கினர். ஒரு மாதம் நீர்மோர் வழங்கப்படும்.

Advertisement