கோடை கலைகள் பயிற்சி

திண்டுக்கல்: மாணவர்களின் கலைத்திறனை வளர்க்கும் விதமாக கோடை விடுமுறையை யொட்டி கலை பண்பாட்டுத்துறை ஜவகர் சிறுவர் மன்றங்கள் வாயிலாக , மல்லர்கம்பம், சிலம்பம், ஓவியம் , கிராமிய நடனம் பயிற்சி 6 முதல் 16 வயதுக்கு உட்பட்ட பள்ளி மாணவர்களுக்கு அளிக்கப்பட உள்ளது.

திண்டுக்கல், தாடிக்கொம்பு ரோடு அரசு மேல்நிலைப் பள்ளியில் நாளை (மே 6) முதல் 24 வரை வரை காலை 10:00 மணி முதல் 12:00 மணி வரை பயிற்சி அளிக்கப்பட உள்ளது. விவரங்களுக்கு 97900 70867ல் அணுகலாம்

Advertisement