வீட்டை அபரிகரித்த காங்., தலைவர் நீதிமன்ற உத்தரவில் வீடு ஒப்படைப்பு
திண்டுக்கல்: திண்டுக்கல்லில் காங்., தலைவர் அபரிகரித்த வீடு நீதிமன்ற உத்தரவின் பேரில் உரிமையாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
திண்டுக்கல்லை சேர்ந்த சுபைதா பேகம் 77, ராஜாமுகமது 80, ஆகியோர்களுக்கு பாத்தியப்பட்ட வீட்டை திண்டுக்கல் மாநகர காங்., தலைவர் மணிகண்டன் கட்டுமான தொழில் செய்வதற்காக வாடகைக்கு பிடித்து ,வீட்டின் உரிமையாளர்களின் அனுமதியின்றி காங்., கட்சி அலுவலகமாக பயன்படுத்தினார்.
வாடகை தொகையை 5 ஆண்டுகளுக்கு மேலாக செலுத்தவில்லை. வீட்டின் உரிமையாளர்கள் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். வீட்டை அதன் உரிமையாளரிடம் ஒப்படைக்கவும், வாடகை பாக்கி ரூ.8 லட்சம் கொடுக்கவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. நீதிமன்ற உத்தரவிற்கு பிறகும் வீட்டை காலி செய்து உரிமையாளர்களிடம் ஒப்படைக்காததால் நீதிமன்ற ஊழியர்கள், கிராம நிர்வாக அலுவலர், வழக்கறிஞர்கள் பிரகாஷ், தனபால், நாசர் முகமது, மோகன், எட்வர்ட் ஜோசப் ஹில்லர், சிவக்குமார். சவரிராஜ் ஆகியோர் முன்னிலையில் வீடை வீட்டின் உரிமையாளர்களிடம் ஒப்படைத்தனர்.
மேலும்
-
2 நாட்களில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.2,160 அதிகரிப்பு; வரலாறு காணாத உச்சம்!
-
பயங்கரவாதிகள் பதுக்கிய ஆயுதங்கள் கண்டெடுப்பு; பஞ்சாப் போலீஸ் தீவிர விசாரணை
-
பட்டுக்கோட்டையில் பெண் தலை துண்டித்து கொலை; மர்ம நபர்களை தேடும் போலீசார்
-
துருக்கி அதிபர் உதவியுடன் போரை முடிவுக்கு கொண்டு வருவேன்: அதிபர் டிரம்ப் சபதம்!
-
சுப்ரீம்கோர்ட் நீதிபதிகள் 21 பேரின் சொத்து விவரங்கள்: இணையத்தில் வெளியீடு
-
கோவில் குளத்தில் மூழ்கி 3 பேர் பலி; வேத பாராயணம் படிக்க வந்த போது சோகம்!