'ஒரே மாதிரி பயிர் பதிவேடு தமிழக அரசின் நோக்கம்'

பல்லடம்; கோவை வேளாண் பல்கலை மாணவர்கள், பல்லடம் வட்டார கிராமப் பகுதிகளில் முகாமிட்டு, வேளாண் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதன்படி, பல்லடத்தை அடுத்த, பருவாய் கிராமத்தில் உள்ள விவசாய நிலங்களில் மாணவர்கள் ஆய்வு மேற்கொண்டனர். பல்லடம் வேளாண் உதவி இயக்குனர் அமுதா இது குறித்து ஆய்வு மேற்கொண்டார்.
அவர் கூறுகையில், 'பயிர் விதைப்பு மற்றும் பாசன உரங்களை மொபைல் செயலி மூலம் நேரடியாக பதிவு செய்து, ஒரே மாதிரியான பயிர் பதிவேட்டை உருவாக்குவதே தமிழக அரசின் நோக்கமாகும்.
மாணவர்கள் பயன்படுத்தும் இந்த செயலியில், தரவுகள் பதிவு செய்வதன் மூலம் தொழில்நுட்பம் சார்ந்த செயல்விதிகளை கற்றுக் கொள்ள முடியும். இந்த முயற்சி கல்வியும் தொழில்நுட்பமும் ஒன்றிணைக்கும் சிறந்த முன்னோடியாக உள்ளது' என்றார்.
முன்னதாக, 'மாணவர்களின் டிஜிட்டல் முறையிலான பயிர் கணக்கீடு குறித்த செயல்பாடுகளை வேளாண் உதவி இயக்குனர் ஆய்வு செய்தார்.
மேலும்
-
கோவில் குளத்தில் மூழ்கி 3 பேர் பலி; வேத பாராயணம் படிக்க வந்த போது சோகம்!
-
சென்னையில் 7 இடங்களில் அமலாக்கத்துறை சோதனை!
-
அரசு பஸ்- பால் வேன் நேருக்கு நேர் மோதல்; நள்ளிரவில் நடந்த விபத்தில் 3 பேர் பலியான சோகம்
-
வடகாட்டில் இரு தரப்பினரிடம் ஏற்பட்ட மோதலால் 10 க்கு மேற்பட்டவர்கள் காயம் : ஒருவருக்கு அருவாள் வெட்டு
-
அப்பல்லோ மருத்துவமனையில் வைகோ அனுமதி!
-
290 ரூபாய் சம்பளத்துக்கு ஆந்திரா, மஹா., பணியாளர்கள்