108 ஆம்புலன்ஸ் டிரைவரின் இருசக்கர வாகனம் திருட்டு

பல்லடம்; கோவை, வெள்ளக்கிணறை சேர்ந்த உதயகுமார் மகன் விஷ்ணு பாரதி 32; 108 ஆம்புலன்ஸ் டிரைவர். காரணம்பேட்டையில் உள்ள ஊராட்சிக்கு சொந்தமான கட்டடத்தில் தங்கியபடி, 108 ஆம்புலன்ஸ் ஓட்டி வருகிறார்.

மே 2ம் தேதி இரவு, வழக்கம்போல் தனது 'பேஷன் ப்ரோ' பைக்கினை, வெளியே நிறுத்திவிட்டு துாங்கச் சென்றார். இரவு, 11.30 மணியளவில், சத்தம் கேட்டு வெளியே வந்து பார்த்தபோது, திருட்டு ஆசாமி ஒருவர், இவரது பைக்கை திருடி சென்றார்.

விஷ்ணு பாரதி, திருட்டு ஆசாமியை விரட்டிப்பிடிக்க முயன்ற போது, பைக்குடன் வேகமாக சென்று தப்பினார். தொடர்ந்து, ஆம்புலன்ஸை எடுத்துக்கொண்டு அந்த ஆசாமியை பிடிக்க முயற்சிக்க அதுவும் தோல்வியிலேயே முடிந்தது.

திருட்டு ஆசாமி, பைக்கை திருட வருவதும், விஷ்ணுபாரதி அவரை விரட்டிப் பிடிக்க முயன்ற போது, பைக்குடன் தப்பிச் செல்வதும் அருகில் உள்ள 'சிசிடிவி' கேமராவில் பதிவாகி உள்ளது. இது குறித்து பல்லடம் போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement