நகர்புற உள்ளாட்சி இடைத்தேர்தலுக்கான வாக்காளர் பட்டியல் வெளியீடு

தேனி: மாவட்டத்தில் நகராட்சியில் 3, பேரூராட்சியில் 7 என மொத்தம் 10 வார்டுகளுக்கு இடைத்தேர்தல் நடத்தப்பட உள்ளது. இத்தேர்தலுக்கான வாக்காளர் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது. இதில் ஆண்கள் 5,199 பேர், பெண்கள் 5,389, ஒரு மூன்றாம் பாலினத்தவர் என, மொத்தம் 10,589 பேர் ஓட்டளிக்க உள்ளனர்.

தமிழகத்தில் நகர்புற உள்ளாட்சிகளில் காலியாக உள்ள கவுன்சிலர் பதவியிடங்களுக்கான இடைத்தேர்தல் விரைவில் நடக்கிறது. இதற்கான பணிகளை மாநில தேர்தல் ஆணையம் தீவிரப்படுத்தி உள்ளது. நகர்புற உள்ளாட்சிகளில் காலியாக உள்ள வார்டுகளுக்கான வாக்காளர் பட்டியல் தயாரிக்கும் பணி கடந்த மாதம் நடந்தது. தொடர்ந்து கலெக்டர் அலுவலகங்களில் இந்த தேர்தலில் கட்டுப்பாட்டு இயந்திரம், ஓட்டுப்பதிவு இயந்திரம் மட்டும் பயன்படுத்தப்பட உள்ளது. இத்தேர்தலுக்கு பயன்படுத்தும் வகையில் மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் முதற்கட்ட சரிபார்ப்புப் பணிகள் நடத்தி முடிக்கப்பட்டு உள்ளன. இந்த சரிபார்ப்புப் பணியில் பெங்களூரூ பெல் நிறுவன இன்ஜினியர்கள் ஈடுபட்டனர்.

இடைத்தேர்தலுக்கான வாக்காளர் பட்டியல் வெளியிடும் நிகழ்ச்சி கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. கலெக்டர் ரஞ்ஜீத்சிங் வாக்காளர் பட்டியலை வெளியிட்டார். டி.ஆர்.ஓ., மகாலட்சுமி, அரசியல் கட்சியினர் பெற்றுக் கொண்டனர். நிகழ்வில் ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர் அபிதா ஹனீப், தேனி நகராட்சி கமிஷனர் ஏகராஜ், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (ஊராட்சிகள்) பிரகாஷ், அரசியல் கட்சி பிரமுகர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

மாவட்டத்தில் தேனி அல்லிநகரம், பெரியகுளம், கூடலுார் நகராட்சிகளில் தலா ஒரு வார்டு, தேவாரம், உத்தமபாளையம், மார்க்கையன்கோட்டை, போ.மீனாட்சிபுரம், ஹைவேவிஸ், ஆண்டிபட்டி, பண்ணைபுரம் ஆகிய பேரூராட்சிகளில் தலா ஒரு வார்டு என 10 வார்டுகளுக்கு இடைத்தேர்தல் நடக்கிறது. இந்த தேர்தலில் 5,199 ஆண்கள், 5389 பெண்கள், ஒரு மூன்றாம் பாலினத்தவர் என மொத்தம் 10,589 பேர் வாக்களிக்க உள்ளனர்.

பாக்ஸ் மேட்டர்:



உள்ளாட்சி அமைப்பு/ வார்டு எண்/ ஆண்/ பெண் / மூன்றாம் பாலினத்தவர்/நகராட்சிகள்////

தேனி அல்லிநகரம்/ 26/ 956/917/1/பெரியகுளம்/17/ 803/868/-/கூடலுார்/10/1019/1112/-/

பேரூராட்சிகள்/////தேவாரம்/6/319/319/-/உத்தமபாளையம்/16/702/726/-/மார்க்கையன்கோட்டை/9/193/220/-/போ.மீனாட்சிபுரம்/1/250/247/-/ஹைவேவிஸ்/10/90/84/-/ஆண்டிபட்டி/11/539/554/-/பண்ணைபுரம்/14/328/342/-/மொத்தம் / /5199/5389/1/

Advertisement