சுவாமி சகஜானந்தா 57வது குரு பூஜை

சிதம்பரம்; காட்டுமன்னார்கோவிலில் சுவாமி சகஜானந்தா மக்கள் நல பேரவை சார்பில் சுவாமி சகஜானந்தா 57வது குரு பூஜை விழா நடந்தது.

மாநில பொதுச் செயலாளர் தட்சணாசேது தலைமை தாங்கினார். மாநில பொதுச் செயலாளர் வெற்றிவேல் வரவேற்றார்.

மாநில செயலாளர் உமாபதி சிவம், மாவட்ட செயலாளர் சுப்பிரமணியன் முன்னிலை வகித்தார்.

சிறப்பு அழைப்பாளர்கள் தமிழ் சேவா சங்க நிறுவனர் ஞானசரவணவேல், அகத்தியம் பவுண்டேஷன் தலைவர் ஈஸ்வர ராஜலிங்கம், ஸ்ரீதரன் சுவாமி, சகஜானந்தா மக்கள் நல பேரவை நிறுவன தலைவர் நாகராஜன், கல்கி பிரபஞ்ச அறக்கட்டளை நிறுவனர் அர்ச்சனா ஈஸ்வர் ஆகியோர் பேரணியாக சென்று சகஜானந்தா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

ஒன்றிய செயலாளர் சாமி தர்மலிங்கம், சீனிவாசன், கோவிந்தராஜ், கோதண்டராஜன், மணிமாறன், கொளஞ்சி உட்பட பலர் பங்கேற்றனர்.

கண்ணப்பன் நன்றி கூறினார்.

Advertisement