இருதரப்பு மோதல்; 3 பேர் மீது வழக்கு

நடுவீரப்பட்டு; காருக்கு வழி விடாமல் பைக் ஓட்டியதால் ஏற்பட்ட தகராறில் 3 பேர் மீது போலீசார் வழக்குப் பதிந்தனர்.

நடுவீரப்பட்டு அடுத்த சி.என்.பாளையத்தைச் சேர்ந்தவர் வைத்திலிங்கம் மகன் மணிகண்டன்,30; இவர், கடலுாரில் இருந்து காரில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார்.

அப்போது பலாப்பட்டைச் சேர்ந்த பிரசாத், கோவிந்தன் ஆகியோர் வழி விடாமல் பைக் ஓட்டினர்.

சி.என்.பாளையம், காமாட்சிபேட்டை அருகில் வந்ததும் மணிகண்டன் காரை நிறுத்தி விட்டு தட்டிக் கேட்டதால் தகராறு ஏற்பட்டது. இதில், பிரசாத்தை மணிகண்டன் தாக்கினார்.

ஆத்திரமடைந்த பிரசாத், கோவிந்தன் மற்றும் அருகில் இருந்த அவர்களின் ஆதரவாளர்கள் சிலர் மணிகண்டனை பீர் பாட்டிலால் தாக்கினர்.

இருதரப்பும் அளித்த புகாரின் பேரில், பிரசாத், கோவிந்தன், மணிகண்டன் ஆகியோர் மீது நடுவீரப்பட்டு போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.

Advertisement