டோல்கேட்டில் நிறுத்தப்படும் பஸ்கள்

திருப்பாச்சேத்தி: திருப்பாச்சேத்தி சுங்கச்சாவடியில் அடிக்கடி அரசு பஸ்களில் பாஸ்ட் டேக்கில் பணம் இல்லை என நிறுத்தப்படுவதால் பயணிகள் சிரமத்திற்குஉள்ளாகி வருகின்றனர்.
மதுரை-பரமக்குடி நான்கு வழிச்சாலையில் திருப்பாச்சேத்தியில் சுங்கச்சாவடி அமைக்கப்பட்டுஉள்ளது. காரைக்குடி கோட்டத்தைச் சேர்ந்த மதுரை, சிவகங்கை, பரமக்குடி, கமுதி, ராமநாதபுரம், ராமேஸ்வரம் ஆகிய கிளை பணிமனைகளைச் சேர்ந்த 92 அரசு பஸ்கள் சென்று வருகின்றன.
மதுரை கோட்டத்தைச் சேர்ந்த 50 பஸ்களும் செல்கின்றன. ஆனால் காரைக்குடி கோட்டத்தைச் சேர்ந்த பஸ்களில் மட்டும் அடிக்கடி பாஸ்ட் டேக்கில் பணம் இல்லை என சுங்கச்சாவடிகளில் நிறுத்தப்படுகின்றன.
டிரைவர் கிளை மேலாளரிடம் அலைபேசியில் தொடர்பு கொண்டு பேசி நீண்ட நேர காத்திருப்பிற்கு பின் பஸ்சை விடுவிக்கின்றனர். அடிக்கடி இதுபோன்ற சம்பவங்கள் நடப்பதால் குறிப்பிட்ட நேரத்திற்கு அலுவலகம், பள்ளி, கல்லூரி செல்ல முடியாமல் பலரும் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். நேற்று மதியம் 3:30 மணிக்கு டிஎன் 63 என்1849 என்ற எண்ணுள்ள அரசு பஸ் ராமநாதபுரத்தில் இருந்து மதுரை செல்லும் போது சுங்கச்சாவடியில் 27 நிமிடம் நிறுத்தப்பட்டது. நீண்ட போராட்டத்திற்கு பின் அனுமதிக்கப்பட்டது.
சுங்கச்சாவடி நிர்வாகம் கூறுகையில், இந்த வழித்தடத்தில் செல்லும் அரசு பஸ்கள் தவிர மாற்றுப்பேருந்துகள் என பத்து பேருந்துகளுக்கு சலுகை கட்டண பாஸ் செல்லும், ஆனால் போக்குவரத்து கழக அதிகாரிகள் திடீரென வேறு பகுதிகளில் இயக்கப்படும் பஸ்களை இந்த பாதையில் திருப்பி விடுகின்றனர்.
பாஸ்ட் டேக் எண்ணும் பஸ் எண்ணும் வேறு வேறாக இருப்பதால் அனுமதிக்க முடிவதில்லை. கிளை மேலாளர்கள் மாற்றுபேருந்தை அனுப்பும் போது டிரைவரிடம் கடிதம் கொடுத்தனுப்ப வேண்டும், அதனையும் செய்ய மறுக்கின்றனர்.
போக்குவரத்து கழக அதிகாரிகள் கூறுகையில், தினசரி செல்லும் பஸ் பழுதானால் மாற்றுப்பேருந்து இயக்கப்படும், பணிமனையில் அப்போது எந்த பேருந்து உள்ளதோ அதனைத்தான் அனுப்புவோம், பாஸ்ட் டேக்கில்பணம் இருந்தாலும் அனுமதிக்க மறுக்கின்றனர் என்றனர்.
மேலும்
-
பயங்கரவாதத்தை எதிர்த்துப் போராட இந்தியாவுக்கு முழு ஆதரவு: அமெரிக்க சபாநாயகர் அறிவிப்பு
-
காஷ்மீர் பயங்கரவாத தாக்குதலுக்கு ஐ.நா.,வில் கடும் கண்டனம்; பாகிஸ்தானுக்கு உலக நாடுகள் கேள்வி
-
12ம் வகுப்பு தேர்வு ரிசல்ட் தேதி மாற்றம்; மே 8ல் வெளியாகும் என அறிவிப்பு
-
காஷ்மீரில் பயங்கரவாதிகள் 2 பேர் கைது; ஏராளமான ஆயுதங்கள் பறிமுதல்
-
சி.பி.ஐ., இயக்குநர் பிரவீனின் பதவிக்காலம் மேலும் ஒரு ஆண்டு நீட்டிக்கப்பட வாய்ப்பு
-
2 நாட்களில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.2,160 அதிகரிப்பு; வரலாறு காணாத உச்சம்!