ஆர்ப்பாட்டம்

காரைக்குடி: காரைக்குடி மாநகராட்சியில் பணிபுரியும் துாய்மை பணியாளர்களுக்கு மாநகராட்சி அடிப்படையில் சம்பளம் வழங்கிடவும், ஒப்பந்த துாய்மை பணியாளர்களை நிரந்தரமாக்க வலியுறுத்தியும் காரைக்குடி மாநகராட்சி அலுவலகம்முன் ஆர்ப்பாட்டம் நடந்தது.

ஏ.ஐ.டி.யு.சி., சார்பில்நடந்த இந்த ஆர்ப்பாட்டத்தில், ஏ.ஐ.டி.யு.சி., மாநில துணைச் செயலாளர் ராமச்சந்திரன், மாநில குழு உறுப்பினர் சண்முகசுந்தரம் மாவட்ட பொதுச் செயலாளர் ராஜா, மாவட்ட துணைச் செயலாளர் கண்ணன் துப்புரவு பணியாளர் சங்கத் தலைவர் முருகன், செயலாளர் ராமராஜ், தூய்மை பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

Advertisement