பாட்டி கழுத்து அறுத்து கொன்ற பேரன் கைது

போத்தனுார்; சுந்தராபுரம் அடுத்து காமராஜர் நகர், அருகேயுள்ள சத்தியமூர்த்தி நகரை சேர்ந்தவர் மனோன்மணி, 80; தனியே வசித்து வந்தார். இவரது மகன் முருகேசன், மூன்றாண்டுகளுக்கு முன் விபத்தில் பலியானார்.
முருகேசனின் மனைவி லட்சுமி, மகன்கள் சிவகுமார், 25, விஷ்ணு, 22. சிவகுமார் உணவு சப்ளை நிறுவனம் ஒன்றில், வேலை பார்த்து வந்தார்.
இந்நிலையில், முருகேசனின் விபத்து வழக்கு முடிவடைந்து, நான்கு பேருக்கும் நஷ்டஈடு வழங்கப்பட்டது. இதில் மனோன்மணியின் பங்கான, 1.5 லட்சமும் வங்கியில் டிபாசிட் செய்யப்பட்டது.
இதனை சிவகுமார் கேட்டு வந்துள்ளார். இச்சூழலில் மனோன்மணி நேற்று மதியம் தனது வீட்டின் முன் உள்ள அரச மரத்தடியில் உட்கார்ந்திருந்தார். அங்கு வந்த சிவகுமார், மீண்டும் பணம் கேட்டுள்ளார். தர மறுத்த மனோன்மணியின் கழுத்தை, கத்தியால் அறுத்தார். மூதாட்டி சத்தமிடவும் அங்கிருந்து தப்பினார்.
தகவல் அறிந்து சென்ற போலீசார், மூதாட்டியை அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். பரிசோதித்த டாக்டர்கள், மூதாட்டி உயிரிழந்துவிட்டதாக கூறியுள்ளனர். சிவகுமார் கைது செய்யப்பட்டார்.
மேலும்
-
கோவில் குளத்தில் மூழ்கி 3 பேர் பலி; வேத பாராயணம் படிக்க வந்த போது சோகம்!
-
சென்னையில் 7 இடங்களில் அமலாக்கத்துறை சோதனை!
-
அரசு பஸ்- பால் வேன் நேருக்கு நேர் மோதல்; நள்ளிரவில் நடந்த விபத்தில் 3 பேர் பலியான சோகம்
-
வடகாட்டில் இரு தரப்பினரிடம் ஏற்பட்ட மோதலால் 10 க்கு மேற்பட்டவர்கள் காயம் : ஒருவருக்கு அருவாள் வெட்டு
-
அப்பல்லோ மருத்துவமனையில் வைகோ அனுமதி!
-
290 ரூபாய் சம்பளத்துக்கு ஆந்திரா, மஹா., பணியாளர்கள்