உள்ளாட்சி அமைப்புகளுக்கான இடைத்தேர்தல்; வாக்காளர் பட்டியல் வெளியிட்டார் கலெக்டர்

கோவை; கோவையில் நடைபெறும் உள்ளாட்சி அமைப்பு இடைத்தேர்தலுக்கான வாக்காளர் பட்டியலை, கலெக்டர் நேற்று மாலை வெளியிட்டார்.

கோவை மாவட்டத்தில் காலியாக உள்ள, 14 உள்ளாட்சி அமைப்பு பதவிகளுக்கான தேர்தல் நடைபெற உள்ளது. வாக்காளர் பட்டியலை, கலெக்டர் அலுவலகத்தில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினர் முன்னிலையில், நேற்று கலெக்டர் வெளியிட்டார்.

இது குறித்து, கோவை மாவட்ட தேர்தல் பிரிவு அதிகாரிகள் கூறியதாவது:

கூடலூர் நகராட்சி, 23 வது வார்டில் 1,251 வாக்காளர்களும், மேட்டுப்பாளையம் நகராட்சி, 2வது வார்டில், 2,503 வாக்காளர்களும், கோவை மாநகராட்சி, 56 வது வார்டில் 18,194 வாக்காளர்களும், செட்டிபாளையம் பேரூராட்சி, 4 மற்றும் 10வது வார்டில், 1,602 வாக்காளர்களும், பொள்ளாச்சி நகராட்சியில், 21, 7, 12வது வார்டுகளில் 5,916 வாக்காளர்களும், நெ.4 வீரபாண்டி பேரூராட்சி,13 வது வார்டில், 1,401 வாக்காளர்களும், நரசிம்மநாயக்கன்பாளையம் பேரூராட்சி, 2வது வார்டில், 1,180 வாக்காளர்களும், தாளியூர் பேரூராட்சி, 3வது வார்டில் 1,015 வாக்காளர்களும், தென்கரை பேரூராட்சி, 1வது வார்டில், 595 வாக்காளர்களும், கோட்டூர் பேரூராட்சி, 15வது வார்டில் 1,343 வாக்காளர்களும், வேடப்பட்டி பேரூராட்சியில், 11வது வார்டில், 738 வாக்காளர்கள் என மொத்தம் 35,738 வாக்காளர்கள் உள்ளனர்.

11 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் காலியாக உள்ள, 14 வார்டு உறுப்பினர்கள் மற்றும் ஒரு மாநகராட்சி கவுன்சிலர் பதவிகளுக்கு, 37 ஓட்டுச்சாவடிகளில் ஓட்டுப்பதிவு நடக்கிறது.

இவ்வாறு, அதிகாரிகள் தெரிவித்தனர்.

Advertisement