சிவகங்கை மாவட்டத்தில் 991 ரவுடி வீட்டில் சோதனை

சிவகங்கை: சிவகங்கை மாவட்டத்தில் தொடர் கொலை, கொள்ளை உள்ளிட்ட சம்பவங்களில் ஈடுபடும் 991 ரவுடிகளின் வீடுகளில் சோதனை மேற்கொள்ளப்பட்டு 12 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சிவகங்கை மாவட்டத்தில் தொடர் கொலை, கொள்ளை சம்பவங்களில் ஈடுபடும் 1073 ரவுடிகள் அடையாளம் காணப்பட்டு அவர்களில் 991 பேர் வீடுகள் தனிப்படை போலீசாரால் சோதனை செய்யப்பட்டது. இதில் 79 ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

அதேபோல் மாவட்டத்தில் பிரச்னைக்குரிய நபர்கள் 325 பேர் அடையாளம் காணப்பட்டு 265 பேர் வீடுகளில் சோதனை நடத்தப்பட்டு 3 ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

கஞ்சா குற்றவாளிகள் 114 பேர் அடையாளம் காணப்பட்டு 83 பேர் வீடுகளில் சோதனை செய்யப்பட்டு 1 ஆயுதம் பறிமுதல் செய்யப்பட்டது.

Advertisement