பட்டமங்கலத்தில் குருப்பெயர்ச்சி விழா

திருப்புத்துார்: திருப்புத்துார் அருகே பட்டமங்கலம் மீனாட்சி சுந்தரேஸ்வரர், தட்சிணாமூர்த்தி கோயிலில் குருப்பெயர்ச்சியை முன்னிட்டு மே 11ல் சிறப்பு தீபாராதனை நடக்கிறது.

குருத்தலமான இக்கோயிலில் குருபகவான் கிழக்கு நோக்கி எழுந்தருளியதால் சிறப்பு பெற்றது. தற்போது மே 11ல் மதியம் 1:24 மணிக்கு குருபகவான் ரிஷப ராசியிலிருந்து மிதுனம் ராசிக்கு பெயர்ச்சியாகிறார். அதை முன்னிட்டு இக்கோயிலில் மே 4ல் குருப்பெயர்ச்சி சிறப்பு ேஹாமம் நடந்தது.

மே 11 அதிகாலை சுவாமி தரிசனம் நடைபெறும். மூலவரும்,உற்ஸவரும் அலங்காரத்தில் அருள்பாலிப்பர். குருப்பெயர்ச்சி நேரத்தில் மூலவருக்கும், ராஜகோபுரத்திற்கும் சிறப்பு தீபாராதனை நடைபெறும்.

Advertisement