சிகிச்சையில் இருந்த பெண்ணும் பலி
திருப்புவனம்: திருப்புவனம் அருகே ஏனாதியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த கணவன், மனைவி, குழந்தை என மூவரும் உயிரிழந்தனர்.
ஏனாதியைச் சேர்ந்தவர் பொன்ராஜ் 30, சிங்கப்பூரில் பணிபுரிந்தார். இன்று சிங்கப்பூர் செல்ல இருந்த இவர், நேற்று முன்தினம் ஐந்து மாத கர்ப்பிணியான மனைவி பிரதீபா 27, மகள் அனுசியா 6, ஆகியோருடன் டூவீலரில் பொருட்கள் வாங்க பூவந்தி வழியாக மதுரை சென்றார்.
பூவந்தி தனியார் நர்சிங்கல்லூரி அருகே மதுரையில் இருந்து காளையார்கோவில் சென்ற கார் மோதியதில் பொன்ராஜூம்மகள் அனுசியாவும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
காயமடைந்த பிரதீபா மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தவர் சிகிச்சை பலனின்றி நேற்று காலை 10:30 மணிக்கு உயிரிழந்தார். உயிரிழந்த மூவர் உடலும் பிரேத பரிசோதனைக்கு பின் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
பொன்ராஜூன் தந்தை கக்கன் அ.தி.மு.க., மாவட்ட விவசாய அணி துணை அமைப்பாளராக உள்ளார்.
மேலும்
-
காஷ்மீரில் பயங்கரவாதிகள் 2 பேர் கைது; ஏராளமான ஆயுதங்கள் பறிமுதல்
-
சி.பி.ஐ., இயக்குநர் பிரவீனின் பதவிக்காலம் மேலும் ஒரு ஆண்டு நீட்டிக்கப்பட வாய்ப்பு
-
2 நாட்களில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.2,160 அதிகரிப்பு; வரலாறு காணாத உச்சம்!
-
பயங்கரவாதிகள் பதுக்கிய ஆயுதங்கள் கண்டெடுப்பு; பஞ்சாப் போலீஸ் தீவிர விசாரணை
-
பட்டுக்கோட்டையில் பெண் தலை துண்டித்து கொலை; மர்ம நபர்களை தேடும் போலீசார்
-
துருக்கி அதிபர் உதவியுடன் போரை முடிவுக்கு கொண்டு வருவேன்: அதிபர் டிரம்ப் சபதம்!