தங்கம் சவரன் விலை ஒரே நாளில் ரூ.1,160 அதிகரிப்பு 

சென்னை: தமிழகத்தில் கடந்த சனிக்கிழமை, 22 காரட் ஆபரண தங்கம் கிராம், 8,755 ரூபாய்க்கும், சவரன், 70,040 ரூபாய்க்கும் விற்பனையானது. வெள்ளி கிராம், 108 ரூபாய்க்கு விற்கப்பட்டது.

ஞாயிற்றுக்கிழமை, தங்க சந்தைக்கு விடுமுறை. நேற்று காலை தங்கம் விலை கிராமுக்கு, 20 ரூபாய் உயர்ந்து, 8,775 ரூபாய்க்கு விற்கப்பட்டது. சவரனுக்கு, 160 ரூபாய் உயர்ந்து, 70,200 ரூபாய்க்கு விற்பனையானது. வெள்ளி விலையில் மாற்றமில்லை.

நேற்று மாலை தங்கம் விலை திடீரென மேலும், 125 ரூபாய் அதிகரித்து, 8,900 ரூபாய்க்கு விற்பனையானது. சவரனுக்கு, 1,000 ரூபாய் உயர்ந்து, 71,200 ரூபாய்க்கு விற்கப்பட்டது. வெள்ளி விலையில் மாற்றமில்லை.

Advertisement