படகுகளை மீட்க ஜெய்சங்கருக்கு ஸ்டாலின் கடிதம்
சென்னை: 'தமிழக மீனவர்களின் படகுகளை உடைக்கும், இலங்கை அரசின் நடவடிக்கையை தடுத்து நிறுத்த வேண்டும்' என, மத்திய வெளியுறவு துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு, முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
கடித விபரம்:
சமீப காலமாக, இந்திய மீனவர்கள் மீது அடையாளம் தெரியாத இலங்கையை சேர்ந்த நபர்களால் நடத்தப்படும் தாக்குதல்கள் அதிகரித்து வருகின்றன.
கடந்த 2ம் தேதி, நாகப்பட்டினம் மாவட்டத்தை சேர்ந்த, 23 மீனவர்கள் மற்றும் 5 நாட்டு படகுகள், வெவ்வேறு சம்பவங்களில் தாக்கப்பட்டு உள்ளனர்.
இந்தியாவிலும், இலங்கையிலும் உள்ள தொடர்புடைய அதிகாரிகளிடம், இப்பிரச்னையை எடுத்து சென்று, உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.
இலங்கை மீன்பிடி மற்றும் நீரியல் வளங்கள் துறை பரிந்துரைப்படி, செயற்கை பவளப்பாறை அமைப்புகளை உருவாக்குவதற்காக, இந்திய மீனவர்களிடம் பறிமுதல் செய்யப்பட்ட, 34 மீன்பிடி படகுகளை உடைத்து, கடலில் மூழ்கடிக்க உள்ளனர்.
எனவே, பறிமுதல் செய்யப்பட்ட படகுகளை, இலங்கை அரசு திரும்ப ஒப்படைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.
மேலும்
-
12ம் வகுப்பு தேர்வு ரிசல்ட் தேதி மாற்றம்; மே 8ல் வெளியாகும் என அறிவிப்பு
-
காஷ்மீரில் பயங்கரவாதிகள் 2 பேர் கைது; ஏராளமான ஆயுதங்கள் பறிமுதல்
-
சி.பி.ஐ., இயக்குநர் பிரவீனின் பதவிக்காலம் மேலும் ஒரு ஆண்டு நீட்டிக்கப்பட வாய்ப்பு
-
2 நாட்களில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.2,160 அதிகரிப்பு; வரலாறு காணாத உச்சம்!
-
பயங்கரவாதிகள் பதுக்கிய ஆயுதங்கள் கண்டெடுப்பு; பஞ்சாப் போலீஸ் தீவிர விசாரணை
-
பட்டுக்கோட்டையில் பெண் தலை துண்டித்து கொலை; மர்ம நபர்களை தேடும் போலீசார்