ஒரு கோடி ரூபாய் மோசடி வங்கி அதிகாரி கைது

பெரம்பலுார்: வாடிக்கையாளர்கள் பெயரில் போலி ஆவணம் தயாரித்து, 1 கோடியே, 2 லட்சத்து, 20,000 ரூபாய் மோசடி செய்த வங்கி அதிகாரியை, பெரம்பலுார் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.

ராஜஸ்தான் மாநிலம், உதய்பூர், சஜ்ஜன் நகர், போலீஸ் காலனியை சேர்ந்தவர் ஆகாஷ் சவுகான், 29. இவர், 2022 மே மாதம் முதல், பெரம்பலுார் மாவட்டம், லெப்பைக்குடிக்காடு கனரா வங்கி கிளையில், நகைக்கடன் பிரிவில் அதிகாரியாக இருந்தார். இவர், வாடிக்கையாளர்கள் ஐவரின் வங்கிக் கணக்கில், நகை கடன் விண்ணப்பம் மற்றும் ஆவணங்களை போலியாக தயாரித்து, மோசடியாக, 1 கோடியே, 2 லட்சத்து, 20,000 ரூபாய் கையாடல் செய்து ஏமாற்றியது தெரியவந்தது.

இது தொடர்பாக, நாமக்கல்லில் உள்ள கனரா வங்கி மண்டல அலுவலகத்தின் உதவி பொது மேலாளர் லோககிருஷ்ணகுமார், 46, பெரம்பலுார் மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் புகார் கொடுத்தார். பெரம்பலுார் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிந்து, ஆகாஷ் சவுகானை நேற்று கைது செய்தனர்.

Advertisement