முதல்வர் அறிவித்த திட்டங்களுக்கு அரசாணை, நிதி வரவில்லை

சிவகங்கை,: சிவகங்கையில் ஜன.21ல் முதல்வர் ஸ்டாலின் அறிவித்த ரூ.169 கோடி திட்டங்கள் குறித்து அரசாணை கூட இது வரை வெளிவரவில்லை. இத்திட்டங்கள் செயல்பாட்டிற்கு வருமா என்ற சந்தேகம் சிவகங்கை மாவட்ட மக்களிடம் எழுந்துள்ளது.
முதல்வர் ஸ்டாலின் மாவட்ட வாரியாக சென்று, மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி வருகிறார். ஜன., 21ல் சிவகங்கை மன்னர் துரைசிங்கம் அரசு கல்லுாரி வளாகத்தில் மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை முதல்வர் ஸ்டாலின் வழங்கினார். அப்போது பல்வேறு திட்டங்களையும் அறிவித்தார்.
அவர் பேசும் போது, சிவகங்கைக்கு 'ைஹலைட்' ஆக 3 திட்டங்களை அறிவிக்க உள்ளதாக கூறி, சிவகங்கையில் ரூ.89 கோடியில் புதிய கலெக்டர் அலுவலகம், அமைச்சர் பெரியகருப்பனின் சொந்த தொகுதியான திருப்புத்துாரில் ரூ.50 கோடியில் புறவழிச்சாலை திட்டம், மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்ட காரைக்குடிக்கு ரூ.30 கோடியில் புதிய மாநகராட்சி கட்டடம் கட்டித்தரப்படும் என அறிவித்தார். ஆனால் இது வரை அதற்கான அரசாணையோ, நிதி ஒதுக்கீடு அறிவிப்போ வரவில்லை. சட்டசபை கூட்டத்தொடரில் அறிவிக்கப்படலாம் என அதிகாரிகள் எதிர்பார்த்தனர். ஆனால், எந்த அறிவிப்பும் வெளியிடப்படவில்லை. இது சிவகங்கை மாவட்ட மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து சிவகங்கை கலெக்டர் ஆஷா அஜித் கூறியதாவது: மூன்று திட்டங்களுக்கான அரசாணை வரவில்லை. இதற்கான முன்மொழிவை அரசின் பார்வைக்கு அனுப்பியுள்ளோம், என்றார்.

மேலும்
-
12ம் வகுப்பு தேர்வு ரிசல்ட் தேதி மாற்றம்; மே 8ல் வெளியாகும் என அறிவிப்பு
-
காஷ்மீரில் பயங்கரவாதிகள் 2 பேர் கைது; ஏராளமான ஆயுதங்கள் பறிமுதல்
-
சி.பி.ஐ., இயக்குநர் பிரவீனின் பதவிக்காலம் மேலும் ஒரு ஆண்டு நீட்டிக்கப்பட வாய்ப்பு
-
2 நாட்களில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.2,160 அதிகரிப்பு; வரலாறு காணாத உச்சம்!
-
பயங்கரவாதிகள் பதுக்கிய ஆயுதங்கள் கண்டெடுப்பு; பஞ்சாப் போலீஸ் தீவிர விசாரணை
-
பட்டுக்கோட்டையில் பெண் தலை துண்டித்து கொலை; மர்ம நபர்களை தேடும் போலீசார்