ஒட்டன்சத்திரத்தில் கோவைக்காய் கிலோ ரூ. 5

ஒட்டன்சத்திரம் : வரத்து அதிகரிப்பால் ஒட்டன்சத்திரம் மார்க்கெட்டில் கோவைக்காய் கிலோ ரூ. 5 க்கு விற்பதால் விவசாயிகள் விரக்தியடைந்தனர்.
திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம், காவேரியம்மாபட்டி, அம்பிளிக்கை , தேனி மாவட்டத்தின் பல பகுதிகளில் கோவைக்காய் சாகுபடி நடக்கிறது. இவை ஒட்டன்சத்திரம் மார்க்கெட்டிற்கு விற்பனைக்கு கொண்டுவரப் படுகின்றன. வரத்து அதிகமானதால் கோவைக்காய் கிலோ ரூ. 5க்கு விற்பனையானது. பறித்தெடுக்கும் கூலிக்கு கூட கட்டுபடியாகாது என விவசாயிகள் தெரிவித்தனர்.
காவேரியம்மாபட்டி விவசாயி பழனிமுத்து கூறியதாவது: 2 ஏக்கரில் வரி கோவைக்காய் பயிர் செய்துள்ளேன். இரண்டு டன் மகசூல் கிடைத்தது. கிலோ ரூ. 5 வீதம் 2 டன் ரூ. 10 ஆயிரத்துக்கு விற்றேன். ஆனால் பறித்தெடுக்க 20 கூலிஆட்களுக்கு 350 வீதம் ரூ.7 ஆயிரம் செலவானது. மார்க்கெட் கொண்டு செல்ல வாடகை ரூ.2 ஆயிரம், கமிஷன் , சுங்கத்திற்கு ரூ.1000 கொடுத்தேன். உரம் பூச்சி மருந்துக்கு ரூ.5 ஆயிரம் வரை செலவானது. ரூ.15 ஆயிரம் வரை செலவு செய்ததற்கு வருமானம் ரூ.10 ஆயிரம் மட்டுமே கிடைத்தது என்றார்.
மேலும்
-
12ம் வகுப்பு தேர்வு ரிசல்ட் தேதி மாற்றம்; மே 8ல் வெளியாகும் என அறிவிப்பு
-
காஷ்மீரில் பயங்கரவாதிகள் 2 பேர் கைது; ஏராளமான ஆயுதங்கள் பறிமுதல்
-
சி.பி.ஐ., இயக்குநர் பிரவீனின் பதவிக்காலம் மேலும் ஒரு ஆண்டு நீட்டிக்கப்பட வாய்ப்பு
-
2 நாட்களில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.2,160 அதிகரிப்பு; வரலாறு காணாத உச்சம்!
-
பயங்கரவாதிகள் பதுக்கிய ஆயுதங்கள் கண்டெடுப்பு; பஞ்சாப் போலீஸ் தீவிர விசாரணை
-
பட்டுக்கோட்டையில் பெண் தலை துண்டித்து கொலை; மர்ம நபர்களை தேடும் போலீசார்