நர்ஸ் தற்கொலை

திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூர் அருகே திருக்குறுங்குடியை சேர்ந்தவர் ராமகிருஷ்ணன் மகள் ஜெயக்குமாரி 19. டிப்ளமோ நர்சிங் முடித்துவிட்டு தனியார் மருத்துவமனையில் வேலை பார்த்தார்.

தாய்க்கும் அவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. ஜெயக்குமாரி அதிக மாத்திரைகளை சாப்பிட்டு மயங்கி விழுந்தார்.

அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று காலை ஜெயக்குமாரி இறந்தார்.

திருக்குறுங்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து ஜெயக்குமாரி தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரிக்கின்றனர்.

Advertisement