எட்டு ஆண்டுகளாக வீடு கேட்டு அலைகிறார் இளம்பெண்

கோவை : குடியிருக்க வீடோ, வீட்டுமனையோ ஏதாவது ஒன்றை ஒதுக்கக் கோரி, கடந்த எட்டு ஆண்டுகளாக கலெக்டர் அலுவலகத்துக்கு நடையாய் நடக்கிறார், கணவனால் கைவிடப்பட்ட ஒரு இளம்பெண்.
கோவைப்புதுாரை அடுத்த அறிவொளி நகர், அண்ணாநகரை சேர்ந்தவர் செல்வி, 31; கணவனால் கைவிடப்பட்டவர். தாயார், குழந்தையுடன் வாடகை வீட்டில் வசித்து வருகிறார். தாயாரும் இவரும் வீட்டு வேலைக்கு சென்று, பிழைப்பு நடத்தி வருகின்றனர்.
கோவை கலெக்டர் அலுவலக மக்கள் குறைதீர்க்கும் பிரிவில், 2017 முதல் வீடு கேட்டு, மனு கொடுத்து வருகிறார். மனுவை ஏற்றுக்கொண்டனரா இல்லையா, விசாரணைக்கு போனதா, பரிசீலனையில் இருக்கிறதா என்று, எந்த விபரமும் தெரியாமல், வாரந்தோறும் மனுக்களை கலெக்டரிடம் சமர்ப்பித்து வருகிறார்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
அங்கன்வாடிகளுக்கு 15 நாள் விடுமுறை
-
பிரசாரத்தில் ஆரத்தி எம்.எல்.ஏ., மீதான வழக்கு ரத்து
-
மழையில் குடை பிடித்து பூக்களை ரசித்த சுற்றுலா பயணிகள்
-
வங்கி பாதுகாப்பு பணியில் இருந்த போலீஸ்காரர் சாவு * போலீசார் விசாரணை
-
கோடை கால நீச்சல் பயிற்சி முகாம் திருவள்ளூரில் சிறுவர்கள் உற்சாகம்
-
பூண்டி நீர்த்தேக்கத்தில் படகு கவிழ்ந்து மீனவர் பலி
Advertisement
Advertisement