வங்கி பாதுகாப்பு பணியில் இருந்த போலீஸ்காரர் சாவு * போலீசார் விசாரணை

காரைக்குடி:காரைக்குடி சுப்பிரமணியபுரத்தில் வங்கி மண்டல அலுவலகத்தில் பாதுகாப்பு பணியில் இருந்த போலீஸ்காரர் உயிரிழந்தது குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி சுப்பிரமணியபுரத்தில் ஐ.ஓ.பி., மண்டல அலுவலகம் உள்ளது. இங்கு சுழற்சி முறையில் ஆயுதப்படை போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். நேற்று காலை 6:00 மணி முதல் 9:00 மணி வரை ஆயுதப்படை போலீஸ்காரர் மதன் குமார் 26, பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தார். காலையில் வங்கி ஊழியர்கள் பார்த்த போது மதன்குமார் உயிரிழந்த நிலையில் கிடந்தார். காரைக்குடி போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது.

எஸ்.பி., ஆசிஷ் ரவாத், டி.எஸ்.பி., பார்த்திபன் விசாரணை மேற்கொண்டனர். மதன்குமாரின் உடல், பிரேத பரிசோதனைக்காக காரைக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. பிரேத பரிசோதனைக்கு பின்னரே இறப்பிற்கான காரணம் தெரியவரும் என போலீசார் தெரிவித்தனர்.

Advertisement