மழையில் குடை பிடித்து பூக்களை ரசித்த சுற்றுலா பயணிகள்

கொடைக்கானல்:கொடைக்கானலில் நேற்று மதியம் சாரல் மழை பெய்த நிலையில் குடை பிடித்து பிரையன்ட் பூங்காவில் மலர்களை பயணிகள் ரசித்தனர்.

தரைப்பகுதியில் வெளுத்து வாங்கும் கோடை வெயிலை சமாளிக்க குளு குளு நகரான கொடைக்கானலுக்கு நாள்தோறும் ஏராளமான பயணிகள் வருகின்றனர். நேற்று காலை நகரில் சுட்டெரிக்கும் வெயில் நீடித்த நிலையில் மதியத்திற்கு பின் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. மதியம் 3:00 மணிக்கு பின் மாலை வரை சாரல் மழை பெய்து கொண்டே இருந்தது.

பிரையன்ட் பூங்காவில் பூத்துக் குலுங்கும் மலர்களை குடை பிடித்து பயணிகள் ரசித்தனர். நகரில் ஆங்காங்கே தரை இறங்கிய மேகக்கூட்டம் என ரம்யமான சீதோஷ்ண நிலையை பயணிகள் ரசித்தனர். மாலை நகரை பனிமூட்டம் சூழ்ந்து வாகனங்கள் முகப்பு விளக்கை எரியவிட்டு சென்றன.

Advertisement