புதுச்சேரியில் மின் தடை எதிரொலி பூங்காக்களில் தஞ்சமடைந்த மக்கள்
புதுச்சேரி: புதுச்சேரி நகர் பகுதி முழுவது நேற்று மின் நிறுத்தம் செய்யப்பட்டிருந்தால் பொதுமக்கள் வீடு களில் மின்சாரம் இல்லாமல் பூங்காக்களில் தஞ்சமடைந்தனர்.
புதுச்சேரி நகரின் பெரும்பான்மையான நகர் பகுதியில் நேற்று மின்வாரியத்தின் பராமரிப்பு பணியின் காரணமாக காலை 9:00 மணி முதல் மாலை 5:00 மணி வரை மின் நிறுத்தம் செய்யப்பட்டது.
முன்னறிவிப்பு செய்திருந்த போதிலும் அக்னி வெய்யில் வாட்டி வதைத்து வருவதால், நிறுதம் காரணமாக வீடுகளில் ஏசி., மற்றும் மின் விறிகளை பயன்படுத்த முடியாமல் பொதுமக்கள் அவதியடைந்தனர்.
இதனால் பெரும்பாலோனார் வீடுகளில் இருக்க முடியாமல் அருகே உள்ள பூங்காக்களின் தஞ்சமடைந்தனர்.
குறிப்பாக சட்டசபை அருகே உள்ள பாரதி பூங்கா உள்ளிட்ட நகரின் பல்வேறு பகுதிகளில் உள்ள பூங்காக்களின் பெண்கள் தங்கள் வீடுகளில் உள்ள குழந்தைகள் பெரியோர்களுடன் தஞ்சமடைந்தனர்.
மாலை 5:00 மணிக்கு பிறகு மின் சப்ளை வழங்கப்பட்டதால், மக்கள் தங்கள் வீடுகளுக்கு சென்றனர்.
மேலும்
-
எட்டையம்பட்டியில் மீன்பிடி திருவிழா
-
மிகுந்த நிதானத்துடன் துல்லியமாக நடந்த இந்திய ராணுவ தாக்குதல்
-
இந்தியாவுக்கு தக்க பதிலடி தரப்படும்: பாகிஸ்தான்
-
பாகிஸ்தானை ஏமாற்றி .. இரவோடு இரவாக நம் ராணுவம் 'அட்டாக்'
-
‛ஆபரேஷன் சிந்தூர்' இன்று காலை 10 மணிக்கு இந்திய ராணுவம் முழு விளக்கம்
-
இந்தியா, பாகிஸ்தான் இடையே பதற்றம் தணியும்: டிரம்ப் நம்பிக்கை