பாகிஸ்தானை ஏமாற்றி .. இரவோடு இரவாக நம் ராணுவம் 'அட்டாக்'

புதுடில்லி: போர் கால ஒத்திகை என பாகிஸ்தானை நம்ப வைத்து நள்ளிரவில் அதிரடியாக தாக்குதலை துவக்கி அசத்தியது நம் ராணுவம்.
பஹல்காம் தாக்குதலுக்கு சரியான பதிலடி கொடுக்க திட்டமிட்டு இன்று நாடு தழுவிய போர் கால ஒத்திகையை மத்திய அரசு அறிவித்தது.
ஆனால் போர் கால ஒத்திகைக்கு முன்பே இந்திய ராணுவம் இன்று (மே.07) நள்ளிரவில் ஆபரேசன் சிந்தூர் என்ற பெயரில் பயங்கரவாதிகளின் 9 முகாம்கள் மீது இந்திய விமானப்படை தாக்குதலை துவக்கியது.
பொதுவாக போர் ஒத்திகை நடத்தப்பட்டால் அதன்பின் இரண்டு - மூன்று நாட்களில் அல்லது சில நாட்கள் கழித்தே போர் துவங்கும். அதே போன்று ஒத்திகைக்கு பின்பு தான் இந்தியா போரை துவக்கும் என பாகிஸ்தான் நம்பியிருந்த நிலையில் நம் ராணுவம் மிகவும் சாதுர்யமாக பாகிஸ்தானை ஏமாற்றி இரவோடு இரவாக பக்காவாக பிளான் செய்து பாகிஸ்தான் , மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் விமான மூலம் குண்டு வீச்சு தாக்குதலை நடத்தியது.. இத்தாக்குதலால் பாகிஸ்தான நிலை குலைந்து போயுள்ளது.
இந்திய ராணுவம் தாக்குதலை பாகிஸ்தான் பிரதமர் ஷப்பாஸ் ஷெரீப் உறுதிபடுத்தியுள்ளார். இதையடுத்து லாகூர், சியல்கோட் விமான நிலையங்களை அடுத்த 48 மணி நேரத்திற்கு பாகிஸ்தான் மூடியது.
பாக்.ராணுவம் பதிலடி
இரவு 3:45 மணியளவில் பாகிஸ்தான் ராணுவம் இந்திய ராணுவத்திற்கு பதிலடி கொடுக்க துவங்கியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அவசர நிலை பிரகடனம்
பாகிஸ்தானில் லாகூர், சியல்கோட் மற்றும் நம் அண்டை மாகாணமான பஞ்சாப் மாகாணத்தில் அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது
நீதி நிலைநாட்டப்பட்டு உள்ளது ; ஜெய்ஹிந்த்
நீதிநிலை நாட்டப்பட்டு உள்ளதாக இந்திய ராணுவம் தன்னுடைய எக்ஸ் வலை தளத்தில் பதிவிட்டு உள்ளது.அதில் தெரிவித்து இருப்பதாவது: பயங்கரவாதிகளின் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. அதே நேரத்தில் பாக்.,ராணுவநிலைகள் மீது தாக்குதல் நடத்தப்படவில்லை எனவும் நீதி நிலைநாட்டப்பட்டு உள்ளது ; ஜெய்ஹிந்த் என பதிவிட்டு உள்ளது.










மேலும்
-
சீல், அட்டோ 3 கார்கள் புதுப்பிப்பு
-
இந்தியாவுடன் போரை ஆதரிக்காத பாக்., மக்கள் மவுலானா கேள்விக்கு மவுனமே பதில்
-
டொயோட்டா ஹைகிராஸ் எம்.பி.வி., 'எக்ஸ்க்ளூசிவ்' ஸ்பெஷல் எடிஷன்
-
காங்., பொதுக்கூட்டத்தை புறக்கணித்த தலைவர்கள் அகில இந்திய தலைமை அதிருப்தி
-
கள்ளழகரை பார்க்கும் இடங்களில் தண்ணீர் பீய்ச்சி அடிப்பது சரிதானா அழகர்கோவில் பட்டர் சொல்வது என்ன
-
பஜாஜ் 'சேத்தக் 3503' இ.வி., ஸ்கூட்டர் 1 லட்சம் ரூபாயில், 155 கி.மீ., ரேஞ்ச்