காற்றாலை மின் உபகரணங்கள் திருட்டு

ஆண்டிபட்டி: தேக்கம்பட்டி அருகே தனியார் காற்றாலை செயல்படுகிறது.

இங்குள்ள அலுவலகத்தில் மேற்பார்வையாளராக குமரேசன் 38, பணியில் இருந்தார். ஏப்ரல் 30 இரவு 8:45 மணிக்கு காற்றாலையில் இருந்த தொடர்பு கட்டுப்பாட்டு அறையில் தொடர்புகள் துண்டிக்கப்பட்டது. உடனே பராமரிப்பு குழுவினர்களுடன் சென்று பார்த்துள்ளனர்.

2ம் தளத்தில் இருந்த ரூபாய் ஒரு லட்சத்து 80 ஆயிரம் மதிப்பிலான கன்ட்ரோல் யூனிட் எல்க்ட்ரிக் மின் உபகரணம் திருட்டு போய் இருந்தது. நடவடிக்கை எடுக்குமாறு குமரேசன் புகாரில் கண்டமனூர் போலீசார் விசாரிக்கின்றனர்

Advertisement