மின் இணைப்புக்கு ரூ.10 ஆயிரம் லஞ்சம்; மின் அதிகாரிகள் இருவர் கைது!

காங்கேயம்: திருப்பூர் அருகே மின் இணைப்பு வழங்க ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய மின் அதிகாரிகள் இருவரை லஞ்ச ஒழிப்புத்துறையினர் கைது செய்தனர்.
திருப்பூர் மாவட்டம் காங்கேயம் படியூரில் கடைகளுக்கு புதிய மின் இணைப்பு கேட்டு மின்வாரிய அலுவலகத்தில் மனு கொடுக்கப்பட்டது. இதனை பெற்றுக் கொண்ட மின்வாரிய உதவி பொறியாளர் வெங்கடேஷ், 45, போர்மேன் நந்தகோபால், 52, ஆகியோர், மனுதாரரிடம் மின் இணைப்பு வழங்க ரூ.10,000 லஞ்சம் கேட்டுள்ளனர்.
இதனை கொடுக்க மனமில்லாத மனுதாரர், இது தொடர்பாக லஞ்ச ஒழிப்புத்துறையினரிடம் புகார் அளித்தார். அவர்கள் கொடுத்த அறிவுறுத்தலின் பேரில், ரசாயணம் தடவிய ரூபாய் நோட்டுக்களை மின்வாரிய அதிகாரிகளுக்கு லஞ்சமாக கொடுத்துள்ளார்.
அப்போது, அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத்துறையினர், லஞ்சம் வாங்கிய மின்வாரிய உதவி பொறியாளர் வெங்கடேஷ், போர்மேன் நந்தகோபால் ஆகிய இருவரை கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர்.











மேலும்
-
பாகிஸ்தானியர்களின் குருட்டு நம்பிக்கையை அடித்து நொறுக்கிய 'ஆபரேஷன் சிந்தூர்'
-
மிகவும் துல்லியமான தாக்குதல்; மத்திய அரசுக்கு சசி தரூர் பாராட்டு
-
ரயில்வே தண்டவாளத்தில் கான்கிரீட் சிலாப்; சிறுவன் உட்பட 5 பேரை பிடித்த போலீசார்
-
105 கிலோ போதை வஸ்து கடத்திய இருவர் கைது
-
மாணவர்கள் உயர்கல்வி நிலைபாடு என்ன? சான்று பெறும்போதே அறிய நடவடிக்கை
-
புதிய போப் தேர்வு செய்யும் பணி தீவிரம்; விரைவில் அறிவிக்க வாய்ப்பு