அப்பாவி மக்களை கொன்றவர்களை ராணுவம் அழித்துள்ளது: ராஜ்நாத் சிங்

5


புதுடில்லி: '' அப்பாவி மக்களை கொன்றவர்களை இந்திய ராணுவம் தாக்கி அழித்துள்ளது,'' என மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறியுள்ளார்.



இது தொடர்பாக அவர் டில்லியில் நடந்த நிகழ்ச்சியில் பேசியதாவது: பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு இந்தியா பழிவாங்கி உள்ளது. அப்பாவி மக்களை கொன்றவர்களை ராணுவம் அழித்தது. இந்தியா தன் ராணுவ பலத்தை காட்டி உள்ளது.


பயங்கரவாதிகளுக்கு சரியான பதிலடி கொடுக்கப்பட்டுள்ளது. அப்பாவி மக்களை கொன்றவர்கள் அழிக்கப்பட்டு உள்ளனர். ஆபரேசன் சிந்தூர் நடவடிக்கையால் பொது மக்கள் பாதிக்கப்படவில்லை.


இந்திய முப்படைகளால் நாட்டிற்கு பெருமை. இந்திய ராணுவம் வரலாற்று சாதனையை படைத்துள்ளது. இலக்கு எதுவாக இருந்ததோ அதனை துல்லியமாக தாக்கி உள்ளோம்.
பயங்கரவாதிகள் இருப்பிடங்கள் மட்டுமே அழித்துள்ளோம். இந்தியா தனது மண்ணில் நடந்த தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் உரிமையை பயன்படுத்தி உள்ளது.

பிரதமர் மோடியால் தான் இந்த தாக்குதல் சாத்தியமாகி உள்ளது. அசோக வனத்தை அழிக்கும்போது அனுமன் பின்பற்றிய லட்சியத்தை நாங்கள் பின்பற்றுகிறோம். நமது ராணுவ படைகள் சுதந்திரமாக செயல்பட அனுமதித்த பிரதமர் மோடிக்கு நன்றி.

எங்கள் நடவடிக்கை மிகுந்த சிந்தனையுடன் திட்டமிடப்பட்ட முறையில் எடுக்கப்பட்டது. நமது படைகளின் துணிச்சலுக்கு மீண்டும் ஒரு முறை தலைவணங்குகிறேன். இவ்வாறு ராஜ்நாத் சிங் பேசினார்.

Advertisement