பக்தர்கள் புகார் அளிக்க ஏற்பாடு

தேனி: வீரபாண்டி கவுமாரியம்மன் கோயில் சித்திரை திருவிழாவிற்காக தற்காலிக கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டுள்ளது.

இதில் பக்தர்கள், பொது மக்கள், இளம்பெண்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் நபர்கள், உடமைகளை திருடும் நபர்கள், அசம்பாவிதங்கள் குறித்து 80151 - 22868 என்ற அலைபேசி எண்ணில் புகார் அளிக்கலாம்.

புகார்கள் ரகசியம் காக்கப்பட்டு, உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் என எஸ்.பி., சிவபிரசாத் தெரிவித்துள்ளார்.

Advertisement