பஜாஜ் 'சேத்தக் 3503' இ.வி., ஸ்கூட்டர் 1 லட்சம் ரூபாயில், 155 கி.மீ., ரேஞ்ச்

'பஜாஜ்' நிறுவனம், அதன் '35 சீரிஸ்' சேத்தக் மின்சார ஸ்கூட்டரின், குறைந்த விலை மாடலை அறிமுகம் செய்துள்ளது. அதாவது, '3501, 3502' ஆகிய இரு '35 சீரிஸ்' சேத்தக் ஸ்கூட்டர்கள் சந்தையில் உள்ள நிலையில், தற்போது மூன்றாவதாக '3503' என்ற புதிய மாடல் வந்துள்ளது.

பேட்டரி, மோட்டார் மற்றும் இதர எலக்ட்ரானிக் உதிரிபாகங்களில் எந்த மாற்றமும் இல்லை. இந்த ஸ்கூட்டரில், ஏற்கனவே உள்ள 3.5 கி.வாட்.ஹார்., பேட்டரி பயன்படுத்தப்படுகிறது. ஒரு சார்ஜில் 155 கி.மீ., வரை பயணிக்கலாம். குறைந்த விலை ஸ்கூட்டர் என்பதால், சார்ஜிங் நேரம் 3 மணி 25 நிமிடமாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

அதேபோல், இதன் டாப் ஸ்பீடு 73 கி.மீ.,ல் இருந்து, 63 கி.மீ.,ராக குறைக்கப்பட்டுள்ளது.

இதில் பல அம்சங்கள் குறைக்கப்பட்டுள்ளன. 'டி.எப்.டி.,' டிஸ்ப்ளேக்கு பதிலாக, 'எல்.சி.டி.,' டிஸ்ப்ளே, அடிப்படையான ப்ளூடூத் இணைப்பு வசதி, முன்புற டிஸ்க் பிரேக்கிற்கு பதிலாக டிரம் பிரக், ஸ்வைப் இண்டிகேட்டர்களுக்கு பதிலாக சாதாரண இண்டிகேட்டர்கள் ஆகியவை இதில் செய்யப்பட்டுள்ள மாற்றங்கள்.

உலோகத்தால் ஆன கட்டமைப்பு, இரு ரைட் மோடுகள், ஹில் ஹோல்டு அசிஸ்ட் வசதி ஆகியவை நீடிக்கின்றன.

இந்த ஸ்கூட்டருக்கு, 'ஏத்தர் ரிஸ்டா எஸ்', 'ஓலா எஸ்1 எக்ஸ் பிளஸ்' மற்றும் 'டி.வி.எஸ்.,ஐ - க்யூப் 3.4' ஆகிய ஸ்கூட்டர்கள் போட்டியாக உள்ளன.

விலை: ரூ.1.10 லட்சம்




விபரக்குறிப்பு



பேட்டரி 3.5 கி.வாட்.ஹார்.,

மோட்டார் பவர் 5.36 ஹெச்.பி.,

டார்க் 20 என்.எம்.,

ரேஞ்ச் 155 கி.மீ.,

டாப் ஸ்பீடு 63 கி.மீ.,

பூட் ஸ்பேஸ் 35 லிட்டர்

Advertisement